கர்நாடகத்தில் புதிதாக 181 பேருக்கு கொரோனா


கர்நாடகத்தில் புதிதாக 181 பேருக்கு கொரோனா
x
தினத்தந்தி 6 May 2022 8:59 PM IST (Updated: 6 May 2022 8:59 PM IST)
t-max-icont-min-icon

கர்நாடகத்தில் நேற்று 191 பேருக்கு பாதிப்பு ஏற்பட்ட நிலையில் இன்று சற்று குறைந்து 181 ஆக பதிவாகியுள்ளது.

பெங்களூரு,-

கர்நாடக அரசின் சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

கர்நாடகத்தில் இன்று 15 ஆயிரத்து 759 பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. இதில் 181 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் பெங்களூருவில் 149 பேரும், மைசூருவில் 27 பேரும், தட்சிண கன்னடாவில் 3 பேரும், ஹாசன், கலபுரகியில் தலா ஒருவரும் உள்ளனர். 

வைரஸ் தொற்றுக்கு விஜயாப்புராவில் ஒருவர் உயிரிழந்தனர். இதனால் கொரோனாவால் இறந்தவர்களின் எண்ணிக்கை 40 ஆயிரத்து 61 ஆக உயர்ந்துள்ளது. ஒரே நாளில் 139 பேர் குணம் அடைந்தனர். மருத்துவ சிகிச்சையில் 1,895 பேர் உள்ளனர். கொரோனா பாதிப்பு விகிதம் 1.14 ஆக உள்ளது.இவ்வாறு சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

Next Story