தெலுங்கானா சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் தனித்துப் போட்டி: ராகுல் காந்தி
தெலுங்கானா முதல் மந்திரி சந்திரசேகர் ராவ், ஒரு அரசர் போல நடந்து கொள்வதாக ராகுல் காந்தி விமர்சித்துள்ளார்.
வாரங்கல்,
தெலுங்கானாவில் எந்த ஒரு கட்சியுடனும் கூட்டணி கிடையாது என்று தெரிவித்துள்ள காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி, தெலுங்கானா முதல் மந்திரியும் தெலுங்கு தேசம் கட்சியின் தலைவருமான சந்திரசேகர் ராவ் ஒரு அரசர் போல செயல்படுவதாகவும் விமர்சித்துள்ளார்.
வாரங்கல் பகுதியில் விவசாயிகள் பங்கேற்ற பொதுக்கூட்டத்தில் உரையாற்றிய ராகுல் காந்தி கூறியதாவது: தெலுங்கானாவில் காங்கிரஸ் ஆட்சி அமைந்தால் விவசாயிகளின் ரூ.2 லட்சம் வரையிலான விவசாயக் கடன்கள் தள்ளுபடி செய்யப்படும். விவசாயிகளுக்கு குறைந்தபட்ச ஆதார விலை கிடைப்பது உறுதி செய்யப்படும். தெலுங்கானாவின் வளர்ச்சிக் கனவு இன்னும் நிறைவேறவில்லை.
ஒரே ஒரு குடும்பம் மட்டுமே அபரிவிதமாக பலன் அடைந்துள்ளது. தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி கட்சியுடன் காங்கிரஸ் கூட்டணி அமைக்காது. அடுத்து வரும் சட்டமன்ற தேர்தல் காங்கிரஸ் கட்சிக்கும் தெலுங்கானா ராஷ்ட்ரிய சமிதி கட்சிக்கும் இடையேயான நேரடி போட்டியாக இருக்கும்.
ஏழைகளுக்கான ஒரு அரசாங்கம் அமையும் என்று தெலுங்கானா மக்கள் எதிர்பார்த்தனர். ஆனால், அது நடக்கவில்லை. சந்திரசேகர் ராவ் முதல் மந்திரி போல் செயல்படாமல் அரசர் போல செயல்படுகிறார். தெலுங்கானாவில் டிஆர்.எஸ் கட்சி ஆட்சி இருப்பதையே பாஜக விரும்புகிறது. சந்திரசேகர் ராவ் எவ்வளவு பணம் முறைகேடாக சம்பாதித்தாலும் அமலாக்கத்துறை நடவடிக்கை எடுக்காததே இதற்கு ஆதாரம்”என்றார்.
Related Tags :
Next Story