இமாசலபிரதேசத்தில் போலீஸ் தேர்வு கேள்வித்தாள் கசிந்தது தேர்வை ரத்து செய்தார் முதல்-மந்திரி

இமாசலபிரதேசத்தில் போலீஸ் தேர்வு கேள்வித்தாள் கசிந்தது தேர்வை ரத்து செய்தார் முதல்-மந்திரி
x
தினத்தந்தி 7 May 2022 1:39 AM IST (Updated: 7 May 2022 1:39 AM IST)
t-max-icont-min-icon

இமாசலபிரதேசத்தில் 1,700 போலீஸ் கான்ஸ்டபிள்களை தேர்வு செய்வதற்கான எழுத்து தேர்வு கடந்த மார்ச் 27-ந் தேதி நடந்தது.

சிம்லா, 

இமாசலபிரதேசத்தில் 1,700 போலீஸ் கான்ஸ்டபிள்களை தேர்வு செய்வதற்கான எழுத்து தேர்வு கடந்த மார்ச் 27-ந் தேதி நடந்தது.

இந்த தேர்வின் கேள்வித்தாள் முன்கூட்டியே வெளியானதாக சமீபத்தில் தகவல்கள் வெளியாகின. இதையடுத்து, அந்த எழுத்து தேர்வு ரத்து செய்யப்படுவதாக முதல்-மந்திரி ஜெய்ராம் தாக்குர் நேற்று அறிவித்தார். மேலும், கேள்வித்தாள் வெளியானதாக கூறப்படுவது பற்றி விசாரணை நடத்த போலீஸ் டி.ஐ.ஜி. மதுசூதன் தலைமையில் சிறப்பு புலனாய்வு குழு அமைக்கப்படுவதாகவும் அவர் கூறினார்.

போலீஸ் எழுத்து தேர்வு, இம்மாத இறுதியில் மீண்டும் நடத்தப்படும் என்றும் ஜெய்ராம் தாக்குர் தெரிவித்தார்.

Next Story