மைசூருவில் பாகிஸ்தான் ஆதரவு கோஷம்; 2 வாலிபர்கள் கைது
கடந்த 3-ந்தேதி பாகிஸ்தானுக்கு ஆதரவாக மர்மநபர்கள் சிலர் கோஷம் எழுப்பியபடி சாலையில் ஊர்வலமாக சென்றுள்ளனர்
மைசூரு,
கர்நாடக மாநிலம் மைசூரு நஞ்சன்கூடு பகுதியில் கடந்த 3-ந்தேதி பாகிஸ்தானுக்கு ஆதரவாக மர்மநபர்கள் சிலர் கோஷம் எழுப்பியபடி சாலையில் ஊர்வலமாக சென்றுள்ளனர். இதனை ஒருவர் செல்போனில் படம் பிடித்து சமூகவலைத்தளங்களில் பதிவிட்டார். அந்த வீடியோ வைரலாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து இந்த விவகாரம் குறித்து உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க கர்நாடக முதல்-மந்திரி பசவராஜ்பொம்மை உத்தரவிட்டார். அதன்படி நஞ்சன்கூடு போலீசார் வழக்குப்பதிவு செய்து பாகிஸ்தானுக்கு ஆதரவாக கோஷம் எழுப்பியதாக பயாஸ், அலிகான் ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.
Related Tags :
Next Story