ஜார்கண்ட் பள்ளியில் 11 மாணவிகளுக்கு கொரோனா பாதிப்பு

ஜார்கண்ட் பள்ளியில் 11 மாணவிகளுக்கு கொரோனா பாதிப்பு
x
தினத்தந்தி 7 May 2022 2:41 AM IST (Updated: 7 May 2022 2:41 AM IST)
t-max-icont-min-icon

ஜார்கண்ட் மாநிலம், சாத்ரா மாவட்டத்தில் கஸ்தூர்பா மகளிர் உறைவிட பள்ளியில் கடந்த 2 நாட்களில் 11 மாணவிகளுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

ராஞ்சி, 

ஜார்கண்ட் மாநிலம், சாத்ரா மாவட்டத்தில் கஸ்தூர்பா மகளிர் உறைவிட பள்ளியில் கடந்த 2 நாட்களில் 11 மாணவிகளுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

12-ம் வகுப்பு மாணவிகள் 8 பேருக்கும், 11-ம் வகுப்பு மாணவிகள் 2 பேருக்கும் கடந்த 4-ந் தேதி தொற்று உறுதியானது. இன்னொரு மாணவிக்கு நேற்று முன்தினம் தொற்று உறுதியானது. முதலில் பாதிப்புக்குள்ளான 10 மாணவிகளில் 8 பேர் தேர்வு எழுதி விட்டு வீடுகளுக்கு சென்று விட்டனர் என அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

பாதிப்புக்குள்ளான பள்ளியில் தொற்று பரவலை தடுக்க முன்எச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன, பள்ளியில் கிருமிநாசினி தெளிக்கப்பட்டது என சாத்ரா மாவட்ட கல்வி சூப்பிரண்டு ஜிதேந்திர சின்கா தெரிவித்தார்.

Next Story