டாக்டர் ஆப்சென்ட்... வீட்டுக்கு ஸ்டிரெச்சரில் நோயாளியுடன் சென்ற உறவினர்கள்
சத்தீஷ்காரில் மருத்துவமனையில் மருத்துவர் இல்லாத நிலையில் அவரது வீட்டுக்கே நோயாளியை ஸ்டிரெச்சரில் வைத்து உறவினர்கள் கொண்டு சென்றுள்ளனர்.
ராய்ப்பூர்,
சத்தீஷ்காரின் கொரியா மாவட்டத்தில் பைகுந்தபுரம் பகுதியில் மாவட்ட மருத்துவமனை ஒன்று உள்ளது. நோயாளி ஒருவரை அவரது உறவினர்கள் ஸ்டிரெச்சரில் வைத்து அந்த மருத்துவமனைக்கு வந்துள்ளனர்.
ஆனால், அவர்கள் தேடி வந்த மருத்துவர் இல்லை என தெரிய வந்துள்ளது. இதனால், யாரிடமும் எதுவும் கூறாமல் உடனடியாக மருத்துவரின் இல்லத்திற்கே ஸ்டிரெச்சரில் வைத்தபடி நோயாளியை அழைத்து சென்றுள்ளனர்.
இதுபற்றி மருத்துவமனை நிர்வாகத்திற்கு எதுவும் தெரியாமல் இருந்தது எப்படி? என்பது பற்றி, அந்த மருத்துவமனையின் அறுவை சிகிச்சை நிபுணர் கே.எல். துருவ் கூறும்போது, பைகுந்தபுரத்தின் பிரபல மருத்துவரிடம் சிகிச்சை பெற வேண்டும் என நோயாளியின் குடும்பத்தினர் விரும்பியுள்ளனர் என கூறியுள்ளார்.
தொடர்ந்து அவர், நடந்த சம்பவம் பற்றி நான் விசாரணை மேற்கொண்டேன். அவர்கள் அனைவரும் மதியம் 1.30 மணிக்கு வந்தனர். எங்களுடைய புறநோயாளி துறை 1 மணிக்கு மூடப்பட்டு விடும். நான் 2.30 மணிக்கு மருத்துவமனையில் இருந்து சென்றேன். இதுபற்றி ஒருவரும் என்னிடம் கூறவில்லை என்று துருவ் கூறியுள்ளார்.
இதன்பின்னர் நோயாளியை பார்த்த குறிப்பிட்ட மருத்துவர், அவரை மாவட்ட மருத்துவமனையில் சேர்க்கும்படி கூறியுள்ளார். இதனை தொடர்ந்து அவருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
Related Tags :
Next Story