இந்தியாவில் இதுவரை செலுத்திய தடுப்பூசி எண்ணிக்கை 190 கோடியை கடந்தது
இந்தியாவில் கடந்த ஆண்டு ஜனவரி 16-ந் தேதி கொரோனாவுக்கு எதிரான தடுப்பூசி திட்டம் தொடங்கியது.
புதுடெல்லி,
இந்தியாவில் கடந்த ஆண்டு ஜனவரி 16-ந் தேதி கொரோனாவுக்கு எதிரான தடுப்பூசி திட்டம் தொடங்கியது. அது பல கட்டங்களாக விரிவுபடுத்தப்பட்டது.
கடந்த ஆண்டு இதே மே மாதம் 1-ந் தேதி முதல் 18 வயதான அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வந்தது.
சென்ற ஜனவரி மாதம் 3-ந் தேதி முதல் 15 முதல் 18 வயது வரையிலானவர்களுக்கும் கொரோனா தடுப்பூசி போடப்படு;கிறது. மார்ச் மாதம் 16-ந் தேதி முதல் 12 முதல் 14 வரையிலான சிறுவர், சிறுமியருக்கும் கொரோனா தடுப்பூசி போடப்படுகிறது. ஏப்ரல் 10-ந் தேதி முதல் 18 வயதான அனைவருக்கும் (2-வது தடுப்பூசி செலுத்தி 9 மாதங்களாகி இருந்தால்) பூஸ்டர் டோஸ் தடுப்பூசி, முன் எச்சரிக்கை டோஸ் என்ற பெயரில் செலுத்தப்படுகிறது.
இந்தியாவில் இதுவரை அனைத்து தரப்பினருக்கும் செலுத்தப்பட்ட தடுப்பூசி டோஸ்களின் மொத்த எண்ணிக்கை 190 கோடியை கடந்துள்ளது. நேற்று நிலவரப்படி 190 கோடியே 94 ஆயிரத்து 982 டோஸ் தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன.
12-14 வயது பிரிவினரில் 3.01 கோடி பேருக்கு முதல் டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. 18-59 வயது பிரிவினருக்கு 9 லட்சத்து 95 ஆயிரத்து 265 முன் எச்சரிக்கை டோஸ் தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன.
இந்த தகவல்களை மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ளது.
Related Tags :
Next Story