முன்னாள் மத்திய மந்திரி எய்ம்ஸ் ஆஸ்பத்திரியில் அனுமதி
இமாசல பிரதேச முதல்-மந்திரி ஜெய்ராம் தாகூர் நேற்று அங்கு சென்று சுக்ராமின் உடல்நலம் குறித்து விசாரித்தார்.
சிம்லா,
இமாசல பிரதேசத்தை சேர்ந்த முன்னாள் மத்திய மந்திரியான பண்டிட் சுக்ராம், வயது முதிர்வு காரணமாக உடல் நலக்குறைவால் அவதிப்பட்டு வருகிறார். இதற்காக மாண்டியில் உள்ள ஆஸ்பத்திரி ஒன்றில் அனுமதிக்கப்பட்டு இருந்தார்.
இமாசல பிரதேச முதல்-மந்திரி ஜெய்ராம் தாகூர் நேற்று அங்கு சென்று சுக்ராமின் உடல்நலம் குறித்து விசாரித்தார். பின்னர் அவரை டெல்லி எய்ம்ஸ் ஆஸ்பத்திரியில் அனுமதிக்க நடவடிக்கை எடுத்தார்.
இதற்காக மாநில அரசின் ஹெலிகாப்டரை ஏற்பாடு செய்த அவர், அதன் மூலம் சுக்ராமை டெல்லிக்கு அனுப்பி வைத்தார். அங்கு சுக்ராம் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
பின்னர் டெல்லி எய்ம்ஸ் இயக்குனரையும் தொடர்பு கொண்டு பேசிய ஜெய்ராம் தாகூர், சுக்ராமுக்கான சிகிச்சை விவரங்களையும் கேட்டறிந்தார்.
காங்கிரஸ் கட்சியை சேர்ந்த பண்டிட் சுக்ராம், கடந்த 1993-96-ம் ஆண்டு காலத்தில் மத்திய மந்திரியாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
Related Tags :
Next Story