3 மாதங்களாக அடைத்து வைத்து ஆண் குழந்தை கண்முன்னே சாமியாரால் கற்பழிக்கப்பட்ட பெண் மீட்பு
ஒடிசாவின் பாலாசோரை சேர்ந்த நடுத்தர வயது பெண் ஒருவருக்கு கடந்த 2017-ம் ஆண்டு திருமணம் நடந்தது.
பாலாசோர்,
ஒடிசாவின் பாலாசோரை சேர்ந்த நடுத்தர வயது பெண் ஒருவருக்கு கடந்த 2017-ம் ஆண்டு திருமணம் நடந்தது. இவருக்கு 2½ வயதில் ஆண் குழந்தை உள்ளது. இந்த பெண்ணின் கணவர் வீட்டார், அதிக வரதட்சணை கேட்டு தொடர்ந்து கொடுமைப்படுத்தி வந்தனர். இதனால் கணவர் மற்றும் அவரது குடும்பத்தினருடன் தொடர்ந்து பெண்ணுக்கு தகராறு இருந்து வந்தது. இதனால் கணவரின் குடும்பத்தினர் சாமியார் ஒருவரை அணுகினர். அவரும், இந்த பிரச்சினையை முடிக்க வேண்டுமென்றால், அந்த பெண் தன்னுடன் சில மாதங்கள் தங்க வேண்டும் எனக்கூறியுள்ளார். இதற்கு அந்த பெண் மறுப்பு தெரிவித்ததால் கணவரின் குடும்பத்தினரே அவருக்கு மயக்க மருந்து கொடுத்து, சாமியாரின் வீட்டில் சேர்த்து விட்டனர். அவரது மகனையும் அனுப்பி வைத்தனர். இதைத்தொடர்ந்து அந்த பெண்ணை தனது வீட்டில் அடைத்து வைத்து கடந்த 79 நாட்களாக சாமியார் வலுக்கட்டாயமாக கற்பழித்து வந்தார்.
மகன் கண் முன்னே நடந்துவந்த இந்த கொடூரம் குறித்து தகவல் அறிந்த போலீசார், தற்போது அந்த பெண்ணை மீட்டுள்ளனர். தப்பி ஓடிய சாமியாரை வலைவீசி தேடி வருகின்றனர். பெண்ணின் கணவர் மற்றும் குடும்பத்தினரிடமும் விசாரணை நடந்து வருகிறது.
Related Tags :
Next Story