'சனாதன தர்ம' கொள்கைகளை இந்தியா மீட்டெடுக்க வேண்டும் - கேரள கவர்னர் ஆரிப் கான்
'சனாதன தர்ம' கொள்கைகளை மீட்டெடுக்க வேண்டியதன் அவசியத்தை அவர் வலியுறுத்தினார்.
ஷாஜஹான்பூர்,
உத்தரபிரதேசத்தில் ஷாஜஹான்பூர் மாவட்டத்தின் கலான் நகரில் ஒரு தனியார் பள்ளி திறப்பு நிகழ்ச்சியில் கேரள மாநில கவர்னர் ஆரிப் முகமது கான் கலந்துகொண்டார். இந்த நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் உமேஷ் பிரதாப் சிங், காவல் கண்காணிப்பாளர் எஸ் ஆனந்த், எம்எல்ஏ ஹரி பிரகாஷ் வர்மா ஆகியோர் கலந்து கொண்டனர்.
இந்த நிகழ்ச்சியில் பேசிய கவர்னர் ஆரிப் கான், இந்தியாவில் முறையான கல்வியைப் பரப்புவதன் மூலம் இந்தியாவின் பழைய கலாச்சாரத்தை மீட்டெடுக்கவும், 'சனாதன தர்ம' கொள்கைகளை மீட்டெடுக்க வேண்டியதன் அவசியத்தை அவர் வலியுறுத்தினார்.
கேரள கவர்னர் ஆரிப் முகமது கான் பேசுகையில், “நாட்டின் பழைய கலாச்சாரத்தை மீட்டெடுக்க அனைவரும் பாடுபட வேண்டும். நாம் திரும்பிச் செல்ல வேண்டும் என்பதற்காக அல்ல, ஆனால் 'சனாதன' கொள்கைகளை மீண்டும் கொண்டு வர வேண்டும் என்பதற்காக. ஆனால், கல்வி இல்லாமல் இது சாத்தியமில்லை.
‘மனித வாழ்வின் நோக்கம் அறிவை அடைவதே, பணிவு என்பது அறிவின் விளைவு’ என்றார் சுவாமி விவேகானந்தர். பணிவு உள்ள எவரையும் இழிவாகப் பார்க்க முடியாது.”
இவ்வாறு அவர் பேசினார்.
Related Tags :
Next Story