இமாசல பிரதேச சட்டப்பேரவை வாயிலில் காலிஸ்தான் கொடிகள் கட்டப்பட்டு இருந்ததால் பரபரப்பு


இமாசல பிரதேச சட்டப்பேரவை வாயிலில் காலிஸ்தான் கொடிகள் கட்டப்பட்டு இருந்ததால் பரபரப்பு
x
தினத்தந்தி 8 May 2022 2:49 PM IST (Updated: 8 May 2022 2:49 PM IST)
t-max-icont-min-icon

பஞ்சாப் மாநிலத்தில் இருந்து வந்திருந்த சில சுற்றுலாப் பயணிகள், காலிஸ்தான் கொடிகளை கட்டியிருக்கலாம் என போலீஸ் சூப்பிரெண்டு குஷால் சர்மா தெரிவித்தார்.

சண்டிகார்,

இமாசல பிரதேச மாநிலத்தின் சட்டப்பேரவை வளாகம் அம்மாநில தலைவர் தர்மசாலாவில் உள்ளது. அதி முக்கியத்துவம் வாய்ந்த இந்த சட்டப்பேரவை வளாகத்தின் நுழைவு வாயிலில் மர்ம நபர்கள் காலிஸ்தான் ஆதரவு கொடிகளை கட்டிச்சென்றுள்ளனர். 

அதேபோல், சட்டப்பேரவை சுற்றுச்சுவரில்  காலிஸ்தான் இயக்கத்திற்கு ஆதரவான வாசகங்களும் எழுதப்பட்டுள்ளன. பாதுகாப்பு நிறைந்த அப்பகுதியில் பிரிவினைவாத இயக்கத்தின் கொடிகள் கட்டப்பட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 

நேற்று நள்ளிரவு அல்லது இன்று அதிகாலையில் இந்த சம்பவம் நடந்திருக்கலாம் என கூறப்படுகிறது. காலிஸ்தான் கொடிகளைப் பார்த்ததும் அதிர்ச்சி அடைந்த காவல்துறை அதிகாரிகள் உடனடியாக அவற்றை அப்புறப்படுத்தினர். 

இது பஞ்சாப் மாநிலத்தில் இருந்து வந்திருந்த சில சுற்றுலாப் பயணிகளின் செயலாக இருக்கலாம் என்றும், இதுதொடர்பாக வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்த உள்ளதாகவும் போலீஸ் சூப்பிரெண்டு குஷால் சர்மா தெரிவித்தார். 

சீக்கிய மதத்தைச் சேர்ந்தவர்களுக்கு காலிஸ்தான் என்ற பெயரில் தனி நாடு கோரி காலிஸ்தான் இயக்கம் தொடங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.


Next Story