கழிவறையில் ரகசிய அறை அமைத்து விபசார தொழில் - 4 பேர் கைது...!


கழிவறையில் ரகசிய அறை அமைத்து விபசார தொழில் -  4 பேர் கைது...!
x
தினத்தந்தி 8 May 2022 3:02 PM IST (Updated: 8 May 2022 3:02 PM IST)
t-max-icont-min-icon

சித்ரதுர்கா அருகே கழிவறையில் ரகசிய அறை அமைத்து விபசார தொழில் செய்த 4 பேர் கைது.

பெங்களூரு,

கர்நாடக மாநிலம் சித்ரதுர்கா மாவட்டம் ஒலலாகெர டவுன் பகுதியில்  தனியார் தங்கும் விடுதி ஒன்று உள்ளது. இந்த விடுதியின் கழிவறையில் ரகசிய அறை அமைத்து விபசார தொழில் நடத்துவதாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுக்கு ரகசிய தகவல் கிடைத்து உள்ளது.

இந்த தகவலை தொடர்ந்து சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற போலீசார் தனியார் தங்கும் விடுதியில் சோதனை செய்தனர். அப்போது விடுதியின் உள்ள கழிவறையின் ஒரு பகுதியில் டைல்ஸ் போடப்பட்டது போன்ற மூடி போட்ட ரகசிய அறை இருந்து உள்ளது.  பின்னர், அந்த அறைக்குள் போலீசார சோதனை செய்த போது ஒரு பெண்ணும், ஒரு ஆணும் இருந்து உள்ளார்கள்.

இதனால் அதிர்ச்சி அடைந்த போலீசார் அவர்கள் இருவரையும் அந்த அறைக்குள் இருந்து மீட்டு விசாரணை நடத்தினர். 

இதுகுறித்து போலீசார் கூறுகையில்,

சித்ரதுர்கா அருகே உள்ள ஒரு தங்கும் விடுதியில் கழிவறையில் ரகசிய அறை அமைத்து விபசாரம் செய்து வந்த 5 பேரை போலீசார் சைது செய்து உள்ளர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து உள்ள போலீசார் கைது செய்யப்பட்டவர்களிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் இதேபோன்று மற்ற தங்கும் விடுதிகளிலும் விபசாரம் நடைபெறுகிறதா என்பது குறித்து போலீசார் ஆய்வு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இவ்வாறு  அவர்கள் தெரிவித்தனர்


Next Story