ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்திற்கு பாதுகாப்பு அனுமதி வழங்கிய மத்திய உள்துறை அமைச்சகம்
மத்திய உள்துறை அமைச்சகம் ஜெட் ஏர்வேஸ் விமான நிறுவனத்திற்கு அதிகாரப்பூர்வ பாதுகாப்பு அனுமதி வழங்கியுள்ளது.
புதுடெல்லி,
ஜெட் ஏர்வேஸ் விமான நிறுவனம், வர்த்தக நோக்கிலான விமானங்களை மீண்டும் இயக்க திட்டமிட்டு உள்ளது. அடுத்த சில மாதங்களில் இதனை நடைமுறைப்படுத்த முடிவு செய்துள்ளது.
கடைசியாக கடந்த 2019ம் ஆண்டு ஏப்ரல் 17ந்தேதி இந்த விமான நிறுவனத்தின் சேவை இயக்கப்பட்ட பின்னர் நிறுத்தப்பட்டது. அப்போது நரேஷ் கோயல் அதன் உரிமையாளராக இருந்துள்ளார். தற்போது ஜெட் ஏர்வேசை ஜலான்-கல்ராக் கன்சோர்டியம் என்ற அமைப்பு ஏற்று நடத்துகிறது.
இந்நிலையில், கடந்த வியாழ கிழமை ஐதராபாத் விமான நிலையத்தில் இருந்து இந்த விமான நிறுவனம் விமான பயண பரிசோதனையை நடத்தியது. விமான சேவைக்கான சான்றிதழ் பெறும் நடவடிக்கையாக இந்த பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
விமானம் மற்றும் அதன் பொருட்கள் இயல்பாக இயங்குகின்றன என விமான போக்குவரத்து இயக்குனரகத்துக்கு (டி.ஜி.சி.ஏ.) நிரூபிப்பதற்காக இந்த பரிசோதனை நடந்துள்ளது.
இதன் தொடர்ச்சியாக, மத்திய விமான போக்குவரத்து அமைச்சகம் கடந்த 6ந்தேதி, அந்நிறுவனத்திற்கு கடிதம் ஒன்றை அனுப்பியது. அதில், மத்திய உள்துறை அமைச்சகம் ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்திற்கு பாதுகாப்பு அனுமதிக்கான சான்றிதழை வழங்கியுள்ளது என தெரிவித்து உள்ளது.
எனினும், விமான நிறுவனம் மற்றொரு நிரூபண பரிசோதனையையும் நடத்த வேண்டும். அது என்னவெனில், டி.ஜி.சி.ஏ. அதிகாரிகள் மற்றும் விமான நிறுவன அதிகாரிகள் உள்ளிட்டோரை பயணிகளாகவும் மற்றும் விமானிகளுடனும் வர்த்தக விமானம் ஒன்று மேற்கொள்ளும் பயண பரிசோதனையை போன்றே இந்த பரிசோதனையும் அமைந்து இருக்கும்.
Related Tags :
Next Story