“வேலை தேடுபவர்களாக இல்லாமல், உருவாக்குபவர்களாக இருக்க வேண்டும்” - நாக்பூர் ஐ.ஐ.எம். மாணவர்களுக்கு ராம்நாத் கோவிந்த் அறிவுறுத்தல்
கல்வி நிலையங்கள் ஒவ்வொருவரிடமும் மறைந்திருக்கும் திறமைகளை வெளிக்கொணர்ந்து மெருகூட்டும் இடம் என்று ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் தெரிவித்துள்ளார்.
மும்பை,
மராட்டிய மாநிலம் நாக்பூரில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள இந்திய மேலாண்மை கழக கட்டிட வளாகத்தின் திறப்பு விழா இன்று நடைபெற்றது. இந்த விழாவில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் கலந்து கொண்டு கட்டிட வளாகத்தை திறந்து வைத்தார்.
இதன் பின்னர் பேசிய ராம்நாத் கோவிந்த், கல்வி நிலையங்கள் நமது கனவுகளை நனவாக்குவதற்கான சந்தர்பத்தை வழங்குவதாகவும், கல்வி நிலையங்கள் ஒவ்வொருவரிடமும் மறைந்திருக்கும் திறமைகளை வெளிக்கொணர்ந்து மெருகூட்டும் இடம் என்றும் தெரிவித்தார்.
நாக்பூர் ஐ.ஐ.எம். மாணவர்கள் வேலை தேடுபவர்களாக இல்லாமல், வேலைகளை உருவாக்குபவர்களாக இருக்க வேண்டும் என அவர் கேட்டுக் கொண்டார். நாக்பூரில் உள்ள ஐ.ஐ.எம். தொழில் முனைவோர் மையத்தின் மூலம் அறக்கட்டளை நிறுவப்பட்டுள்ளதற்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் பாராட்டு தெரிவித்தார்.
Related Tags :
Next Story