கடவுளிடம் இரண்டே இரண்டு விசயங்களை கேட்பேன்... கெஜ்ரிவால் கூறியது என்ன?


கடவுளிடம் இரண்டே இரண்டு விசயங்களை கேட்பேன்... கெஜ்ரிவால் கூறியது என்ன?
x
தினத்தந்தி 8 May 2022 9:12 PM IST (Updated: 8 May 2022 9:12 PM IST)
t-max-icont-min-icon

எங்களுக்கு கொள்ளையடிக்கவோ, ஊழல் பண்ணவோ தெரியாது. ஆனால், பள்ளிகள் மற்றும் மருத்துவமனைகளை எப்படி கட்ட வேண்டும் என தெரியும் என்று கெஜ்ரிவால் கூறியுள்ளார்.





புதுடெல்லி,


டெல்லி முதல்-மந்திரி கெஜ்ரிவால் செய்தியாளர்கள் சந்திப்பில் இன்று பேசும்போது, மராட்டிய பள்ளிகளின் நிலைமை மிக மோசம்.  டெல்லியிலும் இதற்கு முன் அப்படித்தான் இருந்தது.  ஆனால் தற்போது நிலைமை மாறியுள்ளது.

அரசு பள்ளி 12ம் வகுப்பு மாணவர்கள் 97 சதவீதத்தினர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.  4 லட்சம் தனியார் பள்ளி மாணவர்கள் அரசு பள்ளிகளில் சேர்ந்துள்ளனர்.

தொழில் செய்வதற்காக நாங்கள் அரசியலில் இணையவில்லை.  அன்னை இந்தியாவுக்காகவும், நாட்டை காப்பாற்றவும் அரசியலில் இணைந்துள்ளோம்.

கடவுளிடம் நான் இரண்டே இரண்டு விசயங்களை கேட்கிறேன்.  ஒன்று, உலகில் முதல் இடத்தில் என்னுடைய இந்தியா வரவேண்டும்.  இரண்டாவது, நான் வாழும் நாளில் அதனை பார்க்க வேண்டும் என அவர் கூறியுள்ளார்.

எங்களுக்கு கொள்ளையடிக்க தெரியாது.  ஊழல் பண்ண தெரியாது.  வன்முறையில் ஈடுபடவோ அல்லது அராஜகத்தில் ஈடுபடவோ தெரியாது.  ஆனால், பள்ளிகள் மற்றும் மருத்துவமனைகளை எப்படி கட்ட வேண்டும் என தெரியும் என்று அவர் கூறியுள்ளார்.


Next Story