இமாசல பிரதேச சட்டசபை வாசலில் காலிஸ்தான் கொடி போலீஸ் விசாரணை


இமாசல பிரதேச சட்டசபை வாசலில் காலிஸ்தான் கொடி போலீஸ் விசாரணை
x
தினத்தந்தி 9 May 2022 1:47 AM IST (Updated: 9 May 2022 1:47 AM IST)
t-max-icont-min-icon

இரவில் யாரோ மர்ம நபர்கள் இந்த சமூக விரோத செயல்களில் ஈடுபட்டதாக தெரிகிறது.

தர்மசாலா, 

இமாசல பிரதேச சட்டசபை கட்டிடத்தின் பிரதான வாயிலில் நேற்று காலையில் காலிஸ்தான் கொடிகள் கட்டப்பட்டு இருந்தன. மேலும் சட்டசபை கட்டிட சுவரில் காலிஸ்தான் ஆதரவு கோஷங்களும் எழுதப்பட்டன.

நேற்று முன்தினம் இரவில் யாரோ மர்ம நபர்கள் இந்த சமூக விரோத செயல்களில் ஈடுபட்டதாக தெரிகிறது. நேற்று காலையில் இதைப்பார்த்த பொதுமக்கள் இது குறித்து போலீசாருக்கு தெரிவித்தனர்.

இதைத்தொடர்ந்து போலீசார் அங்கு விரைந்து சென்று அந்த கொடிகளை அகற்றினர். அத்துடன் அந்த சுவரில் இருந்தும் கோஷங்களை அழித்தனர்.

இந்த சட்ட விரோத செயல் தொடர்பாக போலீசார் விசாரணையை தொடங்கி உள்ளனர். இந்த சம்பவம் மாநிலத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இந்த சம்பவம் தொடர்பாக பா.ஜனதா மற்றும் காங்கிரஸ் கட்சிகள் கண்டனம் தெரிவித்து உள்ளன.

Next Story