பணம் கொடுத்து முதல்-மந்திரி ஆனவர் பசவராஜ் பொம்மை சித்தராமையா கடும் தாக்கு


பணம் கொடுத்து முதல்-மந்திரி ஆனவர் பசவராஜ் பொம்மை சித்தராமையா கடும் தாக்கு
x
தினத்தந்தி 9 May 2022 4:02 AM IST (Updated: 9 May 2022 4:02 AM IST)
t-max-icont-min-icon

பசவராஜ் பொம்மை மக்களால் தேர்வு செய்யப்பட்ட முதல்-மந்திரி அல்ல. பணத்தை கொடுத்து அவர் முதல்-மந்திரி பதவிக்கு வந்துள்ளார். அதனால் அவர் எதையும் செய்யவில்லை.

பெலகாவி, 

கர்நாடக சட்டசபை எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா பெலகாவியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசியதாவது:-

பசவராஜ் பொம்மை மக்களால் தேர்வு செய்யப்பட்ட முதல்-மந்திரி அல்ல. பணத்தை கொடுத்து அவர் முதல்-மந்திரி பதவிக்கு வந்துள்ளார். அதனால் அவர் எதையும் செய்யவில்லை. அவரை ஆர்.எஸ்.எஸ். அமைப்பு தான் முதல்-மந்திரியாக உயர்த்தியது. அதனால் அந்த அமைப்பு சொல்படி அவர் செயல்படுகிறார். பணத்தை கொடுத்து பதவிக்கு வந்ததால் அவர் எதற்காக பணியாற்ற வேண்டும்?.

கர்நாடகத்தில் பா.ஜனதா ஆட்சிக்கு வந்த கடந்த 4 ஆண்டுகளில் ஏழை மக்களுக்கு ஒரு வீடு கூட கட்டி கொடுக்கவில்லை. இத்தகைய அரசு தொடர்ந்து நீடிக்க வேண்டுமா?. நான் முதல்-மந்திரியாக இருந்தபோது 15 லட்சம் வீடுகளை கட்டி ஏழைகளுக்கு வழங்கினோம்.

இவ்வாறு சித்தராமையா பேசினார்

Next Story