அமெரிக்காவுக்கு போதைப்பொருள் கடத்தல்: சட்டவிரோதமாக நடத்தப்பட்ட இணைய மருந்தகத்தில் ரூ.3.75 கோடி பறிமுதல்
ஐதராபாத்தில் சட்டவிரோதமாக இணையவழி மருந்தகம் இயங்கி வருவது கண்டுபிடிக்கப்பட்டது.
புதுடெல்லி,
தெலுங்கானா மாநில தலைநகர் ஐதராபாத்தில் தோமல்குடா பகுதியில் இருந்து போதைப்பொருள் கடத்தப்பட்டு வருவதாக போதைப்பொருள் கட்டுப்பாட்டு பிரிவுக்கு புகார் வந்தது. அதன்பேரில் அந்த இடத்தில் போதைப்பொருள் கட்டுப்பாட்டு அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
அதில், அங்கு சட்டவிரோதமாக இணையவழி மருந்தகம் இயங்கி வருவது கண்டுபிடிக்கப்பட்டது. மேலும், அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் உள்ள வாடிக்கையாளர்களை மின்னஞ்சல் மூலம் தொடர்பு கொண்டு, போதை மருந்துகள் பற்றி அந்த நிறுவனத்தினர் எடுத்து கூறி வந்துள்ளனர்.
போதைப்பொருள் வாங்க சம்மதிக்கும் வாடிக்கையாளர்களிடம் இணையவழியில் பணம் பெற்றுக்கொண்டு, போதைப்பொருளை அனுப்பி வைத்துள்ளனர். இதுவரை ஆயிரம் தடவைக்கு மேல் அனுப்பி வைத்துள்ளனர்.இந்த விற்பனை மூலம் கிடைத்த ரூ.3 கோடியே 71 லட்சத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். லேப்டாப்கள், செல்போன்கள், இதர எலக்ட்ரானிக் சாதனங்கள் கைப்பற்றப்பட்டன. நிறுவனத்தை நடத்தி வந்த நபர் கைது செய்யப்பட்டார்.
Related Tags :
Next Story