இளம்பெண் கற்பழிப்பு புகார்: ராஜஸ்தான் மந்திரி மகன் மீது டெல்லி போலீஸ் வழக்குப்பதிவு
இளம்பெண் கற்பழிப்பு புகாரின் பேரில் ராஜஸ்தான் மந்திரி மகன் மீது டெல்லி போலீஸ் வழக்குப்பதிவு செய்தனர்.
புதுடெல்லி,
ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரை சேர்ந்த 23 வயது இளம்பெண் புகாரின் பேரில், ராஜஸ்தான் மந்திரி மகேஷ் ஜோஷியின் மகன் ரோகித் ஜோஷி மீது டெல்லி போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
புகாரில் அப்பெண் கூறியிருப்பதாவது:-
ரோகித் ஜோஷியுடன் ‘பேஸ்புக்’ மூலம் எனக்கு பழக்கம் ஏற்பட்டது. கடந்த ஆண்டு ஜனவரி 8-ந் தேதி முதல் முதலில் நேரில் சந்தித்தேன். அப்போது, அவர் குளிர்பானத்தில் எதையோ கலந்து கொடுத்ததால், அதை குடித்த நான் மயங்கினேன்.
என்னை பாலியல் பலாத்காரம் செய்தார். நிர்வாண வீடியோ எடுத்து வைத்துக்கொண்டு மிரட்டினார். திருமணம் செய்து கொள்வதாக வாக்குறுதி அளித்து, கடந்த மாதம் வரை பலதடவை என்னை கற்பழித்தார். இடையில் நான் கர்ப்பம் ஆனபோது, கருவை கலைக்குமாறு வற்புறுத்தினார்.
இவ்வாறு அவர் கூறியிருந்தார்.
டெல்லி போலீசார் வழக்குப்பதிவு செய்து, அத்தகவலை ராஜஸ்தான் மாநில போலீசாருக்கு தெரிவித்தனர். ராஜஸ்தான் போலீசார் அடுத்தகட்ட விசாரணையை மேற்கொள்வார்கள் என்று அவர்கள் கூறினர்.
Related Tags :
Next Story