பேச்சின் நடுவே தண்ணீர் கேட்ட அதிகாரி ; பாய்ந்து சென்று வழங்கிய நிர்மலா சீதாராமனுக்கு பாராட்டு
பேச்சின் நடுவே தண்ணீர் கேட்ட அதிகாரிக்கு பாய்ந்து சென்று வழங்கிய மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் இது குறித்த வீடியோ வைரலாகி உள்ளது.
புதுடெல்லி:
மும்பையில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நேஷனல் செக்யூரிட்டீஸ் டெபாசிட்டரி லிமிடெட் (என்எஸ்டிஎல்) நிர்வாக இயக்குநர் பத்மஜா சந்துருவுக்கு தண்ணீர் வழங்கியதற்காக சமூக ஊடகங்களில் பாராட்டுகளைப் பெற்று உள்ளார்.
நிகழ்ச்சியில் என்எஸ்டிஎல் நிர்வாக இயக்குநர் பத்மஜா சந்துரு பேசிக்கொண்டு இருந்தார். அப்போது தண்ணீர் வழங்குமாறு கேட்டார்.நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் உடனடியாக சென்று பத்மஜா சந்துருவுக்கு தண்ணீர் பாட்டிலை வழங்குகிறார்.
இதனால் வியப்படைந்த திபார்வையாளர்கள் கைதட்டி பாராட்டினர். நிதி அமைச்சருக்கு பத்மஜா நன்றி தெரிவித்தார்.
இது குறித்த வீடியோவை மத்திய மந்திரி தர்மேந்திர பிரதான் தனது டுவிட்டரில் வெளியிட்டு உள்ளார்.
This graceful gesture by FM Smt. @nsitharaman ji reflects her large heartedness, humility and core values.
— Dharmendra Pradhan (@dpradhanbjp) May 8, 2022
A heart warming video on the internet today. pic.twitter.com/isyfx98Ve8
Related Tags :
Next Story