டிரான்ஸ்பார்மர் பழுதானதால் 1 மணி நேரத்திற்கும் மேல் நடந்து சென்று தண்ணீர் எடுத்து வரும் கிராமமக்கள்


கோப்புப் படம்
x
கோப்புப் படம்
தினத்தந்தி 10 May 2022 3:07 AM IST (Updated: 10 May 2022 3:07 AM IST)
t-max-icont-min-icon

டிரான்ஸ்பார்மர் பழுதானதால் கிராமமக்கள் 1 மணி நேரத்திற்கும் மேல் நடந்து சென்று தண்ணீர் எடுத்து வருகின்றனர்.

அவுரங்காபாத்,

நாந்தெட் மாவட்டத்தில் உள்ள பல்சிடாக் என்ற கிராமம், பழங்குடியின மக்கள் அதிகம் வசிக்கும் பகுதியாகும். முன்னாள் மராட்டிய கவர்னர் வித்யாசாகர் ராவ், இந்த கிராமத்தை தத்தெடுத்து வளர்ச்சி பணியை மேற்கொண்டு வந்தார். ஆனால், கடந்த சில மாதங்களுக்கு முன்பு டிரான்ஸ்பார்மர் பழுதானதால், இந்த கிராமத்திற்கான நீர் வினியோகம் பாதிக்கப்பட்டு உள்ளது.

எனவே தினமும் வீட்டுக்கு தேவையான தண்ணீரை பெற, இந்த கிராம மக்கள் ஒரு மணி நேரம் கால்கடுக்க நடக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இந்த கிராமத்திற்கு வெளியே 40 அடி ஆழ கிணறு ஒன்று உள்ளது. இந்த கிணற்றிலிருந்து தினமும் நடந்து சென்று தங்கள் ஆன்றாட தேவைக்கான தண்ணீரை மக்கள் எடுத்து வருகின்றனர்.

இந்த கிராம மக்கள் கின்வாட் பஞ்சாயத்து சமிதியில், டிரான்ஸ்பார்மரை சரி செய்து தங்கள் இன்னல்களுக்கு தீர்வு காணுமாறு முறையிட்டுள்ளனர். மேலும், இந்த பிரச்சினைக்கு தீர்வு காணவில்லை என்றால் மிகப்பெரிய அளவில் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட போவதாக அறிவித்துள்ளனர்.

Next Story