தேசத்துரோக சட்டப்பிரிவை மறுபரிசீலனை செய்ய தயார் சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசு தகவல்


தேசத்துரோக சட்டப்பிரிவை மறுபரிசீலனை செய்ய தயார் சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசு தகவல்
x
தினத்தந்தி 10 May 2022 4:36 AM IST (Updated: 10 May 2022 4:36 AM IST)
t-max-icont-min-icon

ஆங்கிலேயர் காலத்தில் கொண்டுவரப்பட்ட தேவையற்ற சட்டங்களை மறுபரிசீலனை செய்ய பிரதமர் நரேந்திரமோடி தலைமையிலான அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.

புதுடெல்லி, 

கர்நாடகாவை சேர்ந்த ஓய்வு பெற்ற ராணுவ மேஜர் ஜெனரல் எஸ்.ஜி. ஒம்பத்கரே சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில், ‘தேச துரோக சட்டம் 124-ஏ பிரிவு அரசியலமைப்பு சட்டத்துக்கு எதிரானது என்பதால், அதை ரத்து செய்ய வேண்டும்’ என்று கூறியிருந்தார்.

இந்த மனுவை தலைமை நீதிபதி என்.வி.ரமணா தலைமையிலான அமர்வு விசாரித்து வருகிறது. கடந்த ஆண்டு (2021) ஜூலை மாதத்தில் நடந்த விசாரணையின்போது, மனுவின் நகலை மத்திய அரசின் தலைமை வக்கீலுக்கு அளிக்க உத்தரவிட்டு வழக்கு விசாரணையை தள்ளிவைத்தது.

இதற்கிடையே இந்த விவகாரம் தொடர்பாக மத்திய அரசு தாக்கல் செய்துள்ள பிரமாண பத்திரத்தில், ‘நாடு 75-வது ஆண்டு சுதந்திர தின ஆண்டை கொண்டாடி வரும் சூழலில் ஆங்கிலேயர் காலத்தில் கொண்டுவரப்பட்ட தேவையற்ற சட்டங்களை மறுபரிசீலனை செய்ய பிரதமர் நரேந்திரமோடி தலைமையிலான அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. இதன்படி, தேச துரோக வழக்கு பதிவு செய்ய வகை செய்யும் இந்திய தண்டனை சட்டத்தின் 124 ஏ பிரிவை மறுபரிசீலனை செய்யவும், மறுஆய்வு செய்யவும் தயாராக உள்ளது. எனவே அதுவரை இந்த வழக்கு விசாரணையை தள்ளி வைக்க வேண்டும்’ என அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையே இந்த வழக்கு இன்று (செவ்வாய்க்கிழமை) விசாரணைக்கு வருகிறது.

Next Story