குதுப்மினாரில் அனுமன் துதி பாட அழைப்பு - ஊர்வலமாக செல்ல முயன்ற 40 பேர் கைது


குதுப்மினாரில் அனுமன் துதி பாட அழைப்பு - ஊர்வலமாக செல்ல முயன்ற 40 பேர் கைது
x
தினத்தந்தி 10 May 2022 9:55 PM GMT (Updated: 10 May 2022 9:55 PM GMT)

ஐக்கிய இந்து முன்னணி என்ற இந்து அமைப்பு, குதுப்மினாரில் ‘அனுமன் துதி’ பாட அழைப்பு விடுத்தது.

புதுடெல்லி,

டெல்லியில் உள்ள குதுப்மினார், உலகிலேயே உயரமான மசூதி ஸ்தூபியாக கருதப்படுகிறது. ஐ.நா. அமைப்பான யுனெஸ்கோவால் உலகின் பாரம்பரிய சின்னமாக அறிவிக்கப்பட்ட பெருமைக்கு உரியது. தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது.

குதுப்மினார், முன்பு விஷ்ணு ஸ்தம்பமாக இருந்ததாக சில இந்து அமைப்புகள் கூறி வருகின்றன. அந்த வளாகத்தில் உள்ள மசூதிக்குள் இந்து, ஜைன மத கடவுள் சிலைகள் இருப்பதாகவும், அவற்றை வெளியே எடுத்து வந்து வழிபாடு செய்யப்போவதாகவும் தெரிவித்துள்ளன.இதை அடிப்படையாக வைத்து, ஐக்கிய இந்து முன்னணி என்ற இந்து அமைப்பு, குதுப்மினாரில் ‘அனுமன் துதி’ பாட நேற்று அழைப்பு விடுத்தது. 

இதையடுத்து, அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது. அந்த அமைப்பை சேர்ந்த 40 பேர், குதுப்மினாருக்கு ஊர்வலமாக செல்ல முயன்றபோது அவர்களை போலீசார் கைது செய்து வேனில் ஏற்றி அழைத்து சென்றனர். வேறு யாரும் நுழைய முடியாதவாறு நுழைவாயில் மூடப்பட்டது.

Next Story