வரும் ஆண்டுகளில் ஒரு லட்சம் டிரோன் விமானிகள் தேவைப்படுவார்கள் - ஜோதிர்ஆதித்ய சிந்தியா தகவல்


வரும் ஆண்டுகளில் ஒரு லட்சம் டிரோன் விமானிகள் தேவைப்படுவார்கள் - ஜோதிர்ஆதித்ய சிந்தியா தகவல்
x
தினத்தந்தி 11 May 2022 6:21 AM IST (Updated: 11 May 2022 6:21 AM IST)
t-max-icont-min-icon

வரும் ஆண்டுகளில் டிரோன்களை இயக்க ஒரு லட்சம் பேர் தேவைப்படுவார்கள் என்று ஜோதிர்ஆதித்ய சிந்தியா கூறினார்.

புதுடெல்லி,

டெல்லியில் நிதி ஆயோக் சார்பில் நடந்த நிகழ்ச்சியில் மத்திய சிவில் விமான போக்குவரத்து மந்திரி ஜோதிர்ஆதித்ய சிந்தியா பங்கேற்றார். அதில் அவர் பேசியதாவது:-

இந்தியாவில் டிரோன் தொழில்துறையை 3 சக்கரங்கள் உதவியுடன் முன்னேற்றி வருகிறோம். கொள்கை என்பது ஒரு சக்கரம். இரண்டாவது சக்கரம் உற்பத்தி சார்ந்த ஊக்கத்தொகை வழங்கும் திட்டம். இதன் மூலம் டிரோன் துறையில் உற்பத்தியும், சேவைகளும் ஊக்குவிக்கப்படும்.

3-வது சக்கரம் உள்நாட்டு தேவையை உருவாக்குதல். 12 அமைச்சகங்கள் உள்நாட்டு தேவையை அதிகரிக்க முயன்று வருகின்றன.

டிரோன்களை இயக்கும் பயிற்சியை பெற 12-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றால் போதும். பட்டப்படிப்பு தேவையில்லை. 2 அல்லது 3 மாதங்கள் பயிற்சி பெற்றால், டிரோன் விமானி ஆகிவிடலாம். மாதம் ரூ.30 ஆயிரம் சம்பளம் கிடைக்கும்.

இனிவரும் ஆண்டுகளில் டிரோன்களை இயக்க ஒரு லட்சம் பேர் தேவைப்படுவார்கள். அந்த அளவுக்கு நல்ல வேலைவாய்ப்பு இருக்கிறது.

இவ்வாறு அவர் பேசினார்.

Next Story