தேசத்துரோக வழக்கு பதியக்கூடாது - இடைக்கால தடை விதித்தது சுப்ரீம் கோர்ட்

தேசத்துரோக வழக்கு பதியக்கூடாது - இடைக்கால தடை விதித்தது சுப்ரீம் கோர்ட்
x
தினத்தந்தி 11 May 2022 12:07 PM IST (Updated: 11 May 2022 12:54 PM IST)
t-max-icont-min-icon

ஏற்கனவே தேசத் துரோக வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் இருப்பவர்கள் பிணை கோரலாம் என்றும் சுப்ரீம் கோர்ட் குறிப்பிட்டுள்ளது.

புதுடெல்லி,

தேசத் துரோக வழக்கு சட்டப்பிரிவை மத்திய அரசு மறுபரிசீனை செய்யும் வரை வழக்குப் பதியக் கூடாது என்று  சுப்ரீம் கோர்ட் இடைக்கால உத்தரவு பிறப்பித்துள்ளது. 

தேசத் துரோக வழக்குப்  பதிவு செய்யப்படும் 124(ஏ) சட்டப்பிரிவில் வழக்குப் பதிவு செய்யப்படுவதை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்  தொடரப்பட்ட வழக்கில் இன்று இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.  

ஏற்கனவே தேசத் துரோக வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் இருப்பவர்கள் பிணை கோரலாம் என்றும் சுப்ரீம் கோர்ட்  குறிப்பிட்டுள்ளது.

Next Story