திருவனந்தபுரம்: லிப்ட்டில் தலை சிக்கி தனியார் நிறுவன ஊழியர் பலி .


திருவனந்தபுரம்: லிப்ட்டில் தலை சிக்கி தனியார் நிறுவன ஊழியர் பலி .
x
தினத்தந்தி 11 May 2022 7:46 AM GMT (Updated: 2022-05-11T13:16:16+05:30)

திருவனந்தபுரம் அருகே லிப்ட்டில் தலை சிக்கி சுவரில் மோதியதில் தனியார் நிறுவன ஊழியர் பரிதாபமாக உயிரிழந்தார்.

திருவனந்தபுரம்:

கேரள மாநிலம், பேரூர்கடா அருகே பாமாம் கோடு பகுதியில் வசிப்பவர் ஆர்.சுகுமாரன் நாயர், இவரது மகன் சதீஷ்குமார் (வயது 59). இவருக்கு  அஞ்சனா என்ற மனைவியும், கௌரி கிருஷ்ணா என்ற ஒரு மகளும் உள்லனர். இவர் பேரூர்கடா அருகே இயங்கிவரும் எஸ்.கே.பி.சானிட்டரி ஸ்டோர் என்ற கடையில் கடந்த 18 வருடங்களாக ஸ்டோர் கீப்பர் வேலையில் பணி புரிந்து வருகிறார். 

நான்கு மாடிக் கட்டிடங்கள் கொண்ட இந்த நிறுவனத்தில் நேற்று இவர் அலுவல் நிமித்தமாக நாலாவது மாடிக்கு செல்வதற்காக லிப்டில் ஏறியதாக கூறப்படுகிறது.அவசர அவசரமாக இவர் லிஃப்ட்டில் ஏற முயன்றுள்ளார். அப்போது, தலை வெளியே இருந்த நிலையில் லிஃப்ட் கதவு அடைந்து லிஃப்ட் மூன்றாவது மாடியில் இருந்து 4 வது மாடிக்கு மேல்நோக்கி புறப்பட்டு விட்டது. 

லிஃப்ட்டின் மேல் சுவரில் இவருடைய தலை மோதியதில் அவர் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் தலை உடைந்து பரிதாபமாக உயிரிழந்தார். சம்பவம் குறித்து தகவல் அறிந்த போலீசார் விரைந்து சென்று இறந்த சதீஷ் குமாரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக  திருவனந்தபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும், இச்சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Next Story