கர்நாடகா: 4-வது முறையாக ராஜினாமா செய்த ஐ.பி.எஸ் அதிகாரி பா.ஜ.க அரசை குறை கூறவில்லை; மந்திரி சிவராம் ஹெப்பர்


கர்நாடகா: 4-வது முறையாக ராஜினாமா செய்த ஐ.பி.எஸ் அதிகாரி பா.ஜ.க அரசை குறை கூறவில்லை; மந்திரி சிவராம் ஹெப்பர்
x
தினத்தந்தி 11 May 2022 11:00 AM GMT (Updated: 11 May 2022 11:00 AM GMT)

இத்தகைய ராஜினாமாக்கள் ஒவ்வொரு அரசாங்கத்தின் ஆட்சிக் காலத்திலும் வரும், பாஜக ஆட்சியில் மட்டும் அல்ல.

பெங்களூரு,

கர்நாடக மாநில மூத்த ஐபிஎஸ் அதிகாரியான ரவீந்திரநாத் அண்மையில் மனித உரிமைகள் அமலாக்க டிஜிபி பதவியிலிருந்து பயிற்சி பிரிவு டிஜிபி ஆக மாற்றப்பட்டிருந்தார். இந்நிலையில் ஐபிஎஸ் பதவியை ராஜினாமா செய்வதாக அவர் தெரிவித்துள்ளார். 

போலி சாதிச்சான்று கொடுத்த விவகாரம் தொடர்பாக தான் எடுத்த சட்ட நடவடிக்கைகள் எதிரொலியாகவே தன்னை பணி இடமாற்றம் செய்ததாக ரவீந்திரநாத் குற்றம் சாட்டியுள்ளார்.

மேலும் பணிக்காலம் முடியும் முன்பே தொல்லை தரும் நோக்கில் இடம் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாகவும், தலைமைச் செயலாளரின் நடவடிக்கைகள் வேதனை தருவதாகவும் தனது ராஜினாமா கடிதத்தில் ரவீந்திரநாத் கூறியுள்ளார்.முன்னதாக கர்நாடகாவில், பலர் பட்டியலின சாதிச்சான்று பெற்று மோசடி செய்ததாகவும், இதில் ஆளும் பாஜகவை சேர்ந்த சிலருக்கு தொடர்பிருப்பதாகவும் இருந்த புகார்கள் மீது, ஐபிஎஸ் அதிகாரி ரவீந்திரநாத் நடவடிக்கை எடுத்து வந்தார். 

இந்நிலையில், மூத்த ஐபிஎஸ் அதிகாரி ரவீந்திரநாத் ராஜினாமா செய்துள்ளது குறித்து கர்நாடக மந்திரி சிவராம் ஹெப்பர் கூறியிருப்பதாவது:-

இத்தகைய ராஜினாமாக்கள் ஒவ்வொரு அரசாங்கத்தின் ஆட்சிக் காலத்திலும் வரும், பாஜக ஆட்சியில் மட்டும் அல்ல. அவர்கள் தன் மீதான அழுத்தத்தின் கீழ் ராஜினாமா செய்வதாக அவர் கூறியுள்ளார். 

ஆனால் சில நேரங்களில் சில வேறுபட்ட உள் விவகாரங்கள் அவருடைய ராஜினாமாவுக்கு காரணமாக இருந்திருகலாம். அவர் ஏன் ராஜினாமா செய்தார் என்று சரியாக தெரியவில்லை.மூத்த அதிகாரிகள் தங்கள் சொந்த முடிவை எடுக்கிறார்கள். அவர் அரசைக் குறை கூறவில்லை. 

வேலை செய்பவர்கள் எப்பொழுதும் ஏதோ ஒருவித அழுத்தத்தில் தான் இருப்பார்கள்.நான் அமைச்சராக இருக்கிறேன், எனக்கும் நிறைய அழுத்தம் உள்ளது ஆனால் ராஜினாமா அதற்கு தீர்வாகாது” என்று கர்நாடக மந்திரி சிவராம் ஹெப்பர் கூறினார்.

Next Story