பேரறிவாளன் வழக்கில் அடுத்த வாரத்தில் தீர்ப்பு வெளியாக வாய்ப்பு: பேரறிவாளன் தரப்பு வழக்கறிஞர் பிரபு


பேரறிவாளன் வழக்கில் அடுத்த வாரத்தில் தீர்ப்பு வெளியாக வாய்ப்பு: பேரறிவாளன் தரப்பு வழக்கறிஞர் பிரபு
x
தினத்தந்தி 11 May 2022 12:40 PM GMT (Updated: 11 May 2022 12:40 PM GMT)

சுப்ரீம் கோர்ட்டில் நடைபெற்ற வாதங்கள் குறித்து அவர் விளக்கம் அளித்தார்.

புதுடெல்லி,

பேரறிவாளன் தரப்பு வழக்கறிஞர் பிரபு, வழக்கு விசாரணை முடிந்தபின் செய்தியாளர்களை சந்தித்தார். 

இந்த வழக்கு தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டில் நடைபெற்ற வாதங்கள் குறித்து அவர் விளக்கம் அளித்தார். அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது:-

கவர்னர் மத்திய அரசுக்கு தான் அறிக்கை அனுப்பி உள்ளார். ஐபிசி குற்றங்கள் மத்திய அரசின் கீழ் தான் வரும்.மேலும், ஐபிசி குற்றங்களில் தண்டனை பெற்றவர்களுக்கு மத்திய அரசே தண்டனை வழங்கும் என்பது தவறான வாதம்.திங்கள்கிழமைக்குள் எழுத்துப்பூர்வமான வாதங்களை சமர்ப்பிக்க வேண்டும். 

முக்கியமான வழக்கு என்பதால் விரிவாக ஆலோசிக்க கோர்ட்டு நீதிபதிகள்  கால அவகாசம் எடுத்துகொள்வார்கள். இனிமேல் விசாரணை என்பது கிடையாது, தீர்ப்பு மட்டுமே வழங்கப்பட்ட உள்ளது. தீர்ப்பு எங்களுக்கு சாதகமாக இருக்கும் என்று எதிர்பார்க்கிறோம்.

பேரறிவாளன் அடுத்த வாரம் விடுதலையாக வாய்ப்புள்ளது. இந்த வழக்கில் தீர்ப்பு அடுத்த வாரத்தில் வெளியாக அதிகம் வாய்ப்புள்ளது என பேரறிவாளன் தரப்பு வழக்கறிஞர் பிரபு கூறினார்.


Next Story