ரெயிலில் குழந்தைகளுடன் பயணிப்பவர்களுக்காக 'பேபி பெர்த்' வசதி - வடக்கு ரெயில்வே அறிமுகம்..!


ரெயிலில் குழந்தைகளுடன் பயணிப்பவர்களுக்காக பேபி பெர்த் வசதி - வடக்கு ரெயில்வே அறிமுகம்..!
x
தினத்தந்தி 11 May 2022 6:59 PM IST (Updated: 11 May 2022 6:59 PM IST)
t-max-icont-min-icon

ரெயிலில் குழந்தைகளுடன் பயணிப்பவர்களுக்காக 'பேபி பெர்த்' வசதியை வடக்கு ரெயில்வே அறிமுகம் செய்துள்ளது.

லக்னோ,

ரெயிலில் குழந்தைகளுடன் பயணிக்கும் பயணிகள் எளிதாக பயணம் செய்யும் வகையில், குழந்தைகளுக்கு பெரியவர்களுடன் இணைந்த படுக்கை வசதியை வடக்கு ரெயில்வே அறிமுகம் செய்துள்ளது. பேபி பெர்த் என்ற இந்த படுக்கை வசதி சோதனை முறையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

அன்னையர் தினத்தை முன்னிட்டு வடக்கு ரெயில்வே கடந்த 9-ம் தேதி லக்னோ மெயிலில் இந்த படுக்கை வசதியை அறிமுகம் செய்தது. லக்னோ மெயிலில் கோச் எண் 194129/பி4, பெர்த் எண் 12 & 60-ல் குழந்தைகளுக்கான இந்த படுக்கை வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

மடித்து வைக்கக்கூடியதாகவும் குழந்தைகள் விழாமல் இருக்க ஒரு ஸ்டாப்பரும் இந்த பேபி பெர்த்தில் பொருத்தப்பட்டுள்ளது. இது கைக்குழந்தைகளுக்கான கூடுதல் சிறிய படுக்கையாக செயல்படுகிறது. இது ரெயில்களில் கீழ் பெர்த்துடன் இணைக்கப்பட்டுள்ளது. இந்த பேபி பெர்த்துக்கான முன்பதிவு இன்னும் தொடங்கவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Story