சிவசேனா எம்.எல்.ஏ. மாரடைப்பால் காலமானார்
மராட்டியத்தில் சிவசேனா எம்.எல்.ஏ. ரமேஷ் லத்கே நேற்றிரவு மாரடைப்பால் காலமானார்.
புனே,
மராட்டியத்தில் சிவசேனா தலைமையிலான கூட்டணி ஆட்சி நடந்து வருகிறது. முதல்-மந்திரியாக உத்தவ் தாக்கரே பதவி வகித்து வருகிறார். அவரது கட்சியை சேர்ந்த அந்தேரி கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ.வாக இருந்தவர் ரமேஷ் லத்கே.
அவருக்கு நேற்றிரவு திடீரென மாரடைப்பு ஏற்பட்டு உள்ளது. இதனை தொடர்ந்து அவர் காலமானார். கடந்த 2014ம் ஆண்டு மராட்டிய சட்டசபைக்கான தேர்தலில் அந்தேரி கிழக்கு தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற ரமேஷ் காங்கிரஸ் கட்சியின் சுரேஷ் ஷெட்டியை வீழ்த்தினார்.
இதன்பின்னர் 2019ம் ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலில் சுயேட்சை வேட்பாளரான எம். பட்டேல் என்பவரை தோற்கடித்து எம்.எல்.ஏ.வானார்.
Related Tags :
Next Story