பிரதமர் மோடிக்கு பெரிய அளவில் ராக்கியை அன்பு பரிசாக வழங்கிய குஜராத் பெண்கள்
குஜராத் பெண்கள் அளித்த பெரிய அளவிலான அன்பு பரிசான ராக்கி கனவுகளை நிறைவேற்றும் ஆற்றலை தந்துள்ளது என பிரதமர் மோடி கூறியுள்ளார்.
புதுடெல்லி,
குஜராத்தின் பரூச் நகரில், அரசு சார்பில் வழங்கப்படும் திட்டங்களை பெறும் பயனாளர்களுடன் காணொலி காட்சி வழியே பிரதமர் மோடி உரையாடும் நிகழ்ச்சி இன்று நடந்தது. இதில், பிரதமர் மோடி பயனாளர்கள் பலரிடம் உரையாடினார்.
இந்த நிகழ்ச்சியில், நாட்டில் பெண்களின் வாழ்க்கை முறையை எளிமைப்படுத்தியதற்காகவும், கண்ணியமுடன் நாட்டுக்கு பங்காற்றியதற்காகவும் பெண்களில் சிலர் பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்து கொண்டதுடன், பெரிய அளவை கொண்ட ராக்கி ஒன்றையும் அன்பு பரிசாக வழங்கியுள்ளனர்.
ராக்கி வடிவில் தனக்கு வலிமை தந்ததற்காக அவர்களுக்கு நன்றி தெரிவித்து கொண்ட பிரதமர் மோடி, கடினமுடன் உழைக்க வேண்டும் என்று தனக்கு ஊக்கம் ஏற்படுத்தும் வகையிலான ஒரு கேடயம் போல் இது விளங்கும் என்று கூறியுள்ளார்.
நீங்கள் அளித்த இந்த ராக்கி கனவுகளை நிறைவேற்றி வைக்கும் திறனையும், ஆற்றலையும் எனக்கு தந்துள்ளது. ஒரு விலைமதிப்பில்லா பரிசாக நான் இதனை நினைத்து கொள்வேன். இது என்னுள், ஏழைகளுக்கு சேவையாற்றுவதற்கான ஊக்கம் ஏற்படுத்துவதுடன் 100 சதவீத பணி நிறைவுறும் வகையில் அரசை பணியாற்ற செய்யும் என்று கூறியுள்ளார்.
நான் குஜராத்தில் இருந்தபோது, என்னுடைய பாதுகாப்பு பற்றிய செய்திகள் அந்நேரத்தில் வெளிவந்தன. நான் கோடிக்கணக்கிலான அன்னையரின் பாதுகாப்பினை பெற்று வைத்துள்ளேன் என்று எப்போதும் கூறுவேன் என்றும் அவர் கூறியுள்ளார்.
Related Tags :
Next Story