கர்நாடகத்தில் கட்டாய மதமாற்ற தடைக்கு அவசர சட்டம்-மந்திரிசபை கூட்டத்தில் முடிவு
மேல்-சபையில் ஒப்புதல் கிடைக்காததால் கர்நாடகத்தில் மதமாற்ற தடைக்கு அவசர சட்டத்தை பிறப்பிக்க மந்திரிசபை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.
பெங்களூரு,
மேல்-சபையில் ஒப்புதல் கிடைக்காததால் கர்நாடகத்தில் மதமாற்ற தடைக்கு அவசர சட்டத்தை பிறப்பிக்க மந்திரிசபை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.
கர்நாடக மந்திரிசபை கூட்டம் முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை தலைமையில் பெங்களூரு விதான சவுதாவில் நடைபெற்றது. இதில் மந்திரிகள் மற்றும் உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து சட்டத்துறை மந்திரி மாதுசாமி நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
வலுக்கட்டாயமாக நடைபெறும் மதமாற்றங்களை தடுக்கும் நோக்கத்தில் மதமாற்ற தடை சட்டத்திற்கு அவசர சட்டம் பிறப்பிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அதற்கு சட்டசபையில் ஒப்புதல் பெறப்பட்டுள்ளது. ஆனால் மேல்-சபையில் அதற்கு இன்னும் அனுமதி கிடைக்கவில்லை. அதனால் அவசர சட்டத்தை பிறப்பித்துள்ளோம்”என்றார்.
Related Tags :
Next Story