பேரக்குழந்தை பெற்று தராவிட்டால் ரூ.5 கோடி இழப்பீடு: மகன்-மருமகள் மீது பெற்றோர் வழக்கு
உத்தரகாண்டில் பேரக்குழந்தை பெற்று தராவிட்டால் ரூ.5 கோடி இழப்பீடு தரவேண்டும் என்று மகன்-மருமகள் மீது பெற்றோர் வழக்கு தொடர்ந்துள்ளனர்.
டேராடூன்,
உத்தரகாண்ட் மாநிலத்தை சேர்ந்தவர் பிரசாத். இவரது மகனுக்கு 6 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இதுவரை குழந்தைகள் இல்லை. இந்த நிலையில் பிரசாத் உத்தரகாண்ட் கோர்ட்டில் இழப்பீடு கேட்டு ஒரு வழக்கு தொடர்ந்துள்ளார். அந்த மனுவில் அவர் கூறியிருப்பதாவது:-
எனது மகனுக்கு வெளிநாடு சென்று படிக்கவும், அமெரிக்காவில் விமானி பயிற்சி எடுத்து கொள்ளவும் ஏராளமான பணம் செலவழித்து உள்ளேன். அவரது திருமணத்தை நட்சத்திர ஓட்டலில் மிகுந்த பொருட் செலவில் நடத்தினேன். அவர்கள் வெளிநாட்டு தேனிலவு செல்லவும் தாராளமாக செலவு செய்தேன்.
தற்போது என் மகன் கவுகாத்தியிலும், மருமகள் நொய்டாவிலும் பணி நிமித்தமாக தனித்தனியாக வசிக்கிறார்கள். அவர்கள் திருமணம் செய்து 6 ஆண்டுகள் ஆகிவிட்டது. அவர்கள் குழந்தை பெற்றுக்கொள்வதை பற்றியும் கவலைப்படவில்லை. அதனால் எங்களுக்கு மன உளைச்சல் ஏற்பட்டுள்ளது.
எனவே இன்னும் ஒரு ஆண்டில் எங்களுக்கு பேரக்குழந்தை பெற்று தரவேண்டும். இல்லாவிட்டால் மகன், மருமகள் இருவரும் ரூ.5 கோடி இழப்பீடு தரவேண்டும். இவ்வாறு அவர் கூறியிருந்தார். இந்த வழக்கை கோர்ட்டு விசாரணைக்கு ஏற்றுக்கொண்டது. வருகிற 15-தேதி வழக்கு விசாரணைக்கு வருகிறது.
Related Tags :
Next Story