ஆந்திரா: சிறுமியை மிரட்டி 6 மாதம் பாலியல் வன்கொடுமை - 4 பேர் கைது...!


ஆந்திரா: சிறுமியை மிரட்டி 6 மாதம் பாலியல் வன்கொடுமை - 4 பேர் கைது...!
x
தினத்தந்தி 13 May 2022 5:51 AM GMT (Updated: 13 May 2022 5:51 AM GMT)

ஆந்திராவில் சிறுமியை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்த 4 பேரை போலீசார் கைது செய்து உள்ளனர்.

ஆந்திரா,

ஆந்திர மாநிலம் கடப்பா பகுதியை சேர்ந்த 15 வயது சிறுமியும் அவரது தந்தையும் அங்கு உள்ள கோவிலில் பிச்சை எடுத்து வந்தனர்.

இந்த நிலையில் அதே பகுதியை சேர்ந்த செம்பு என்பவர் சிறுமியை காதலிப்பதாக ஆசை வார்த்தை கூறி பாலியல் வன்கொடுமை செய்து வீடியோ எடுத்துள்ளார். 

அந்த வீடியோவை காட்டி நண்பர்களிடமும் உல்லாசமாக இருக்க வேண்டும். இல்லையெனில் வீடியோவை சமூக வலைத் தளங்களில் வெளியிடுவதாக சிறுமியை செம்பு மிரட்டியதாக தெரிகிறது.

அவனது மிரட்டலுக்கு பயந்த சிறுமி  ஒத்துக்கொண்டு உள்ளார். இதையடுத்து செம்புவின் நண்பர்கள் பலர் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து உள்ளனர். கடந்த 6 மாதங்களாக இந்த சம்பவம் நடந்து வந்துள்ளது.

இந்த நிலையில் கடந்த 4- ம் தேதி சிறுமிக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டது. சிறுமியை அங்குள்ள ஆஸ்பத்திரிக்கு அவரது தந்தை சிகிச்சைக்காக அழைத்து சென்றார். அப்போது சிறுமியை பரிசோதித்த டாக்டர் சிறுமி 3 மாதம் கர்ப்பமாக இருப்பதாக தெரிவித்தார்.

இதனை கேட்டு அதிர்ச்சி அடைந்த அவரது தந்தை இதுகுறித்து கோட்டை மகளிர் போலீசில் புகார் அளித்தார். இதுகுறித்து கடப்பா போலீஸ் சூப்பிரண்டு அன்பு ராஜனிடம் தகவல் தெரிவிக்கப்பட்டது. அவரது உத்தரவின் பெயரில் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

இந்த வழக்கின் விசாரணை அதிகாரியாக கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு பூஜிதா நியமிக்கப்பட்டு குற்றவாளிகள் 4 பேரை கைது செய்தனர். மேலும் தலைமறைவாக உள்ள 6 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.


Next Story