திரிபுரா மாநில முதல் மந்திரி பிப்லப் குமார் தேப் திடீர் ராஜினாமா
திரிபுரா மாநில முதல் மந்திரி பிப்லப் குமார் தேப் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
அகர்தலா,
திரிபுரா மாநிலத்தில் 25 ஆண்டு கால கம்யூனிஸ்ட் ஆட்சிக்கு முடிவு கட்டிய பாஜக, கடந்த 2018 ஆம் ஆண்டு ஆட்சியை கைப்பற்றியது. அம்மாநிலத்தின் முதல் மந்திரியாக இருந்து வந்த பிப்லப் குமார் தேப் பதவி வகித்தார்.
அவ்வப்போது சர்ச்சை கருத்துக்களை பேசுவதை வாடிக்கையாகக் கொண்டவர் இவர்.
கடந்த 2018- முதல் முதல் மந்திரியாக இருந்து வரும் பிப்லப் குமார் தேப் இன்று அம்மாநில கவர்னராக உள்ள எஸ்.என். ஆர்யாவை சந்தித்து தனது ராஜினாமா கடிதத்தை அளித்தார்.
சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் ஒருவருடம் உள்ள நிலையில், பிப்லப் குமார் தேப் தனது பதவியை ராஜினாமா செய்தது அக்கட்சியின் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உள்கட்சி பூசல் காரணமாக பிப்லப் குமார் தேப் பதவியில் இருந்து விலகியதாக அம்மாநில அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்படுகிறது.
பதவியை ராஜினாமா செய்வதாக கடிதம் அளித்து விட்டு பிடிஐ செய்தி நிறுவனத்திற்கு பேட்டி அளித்த பிப்லப் குமர் தேப், கட்சியை வலுப்படுத்த நன் பணியாற்ற வேண்டும் என்று கட்சித்தலைமை விரும்புகிறது” என்றார்.
திரிபுராவில் புதிய முதல் மந்திரியை தேர்வு செய்ய இன்று பாஜக எம்.எல்.ஏக்கள் கூட்டம் நடைபெறும் என்று பாஜக வட்டாரங்கள் கூறுகின்றன. பாஜகவின் மேலிட கண்காணிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ள புபேந்திர குமார் மற்றும் வினோத் தாவ்டே ஆகியோர் திரிபுராவில் முகாமிட்டுள்ளனர்.
Related Tags :
Next Story