கர்நாடகத்தில் இன்று 103 பேருக்கு கொரோனா


கர்நாடகத்தில் இன்று 103 பேருக்கு கொரோனா
x
தினத்தந்தி 14 May 2022 9:53 PM IST (Updated: 14 May 2022 9:53 PM IST)
t-max-icont-min-icon

கர்நாடகாவில் இன்று 103 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.


பெங்களூரு, 

கர்நாடகத்தில்  கொரோனா பாதிப்பு குறித்து சுகாதாரத்துறை வெளியிட்டு உள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-

கர்நாடகத்தில் இன்று  19 ஆயிரத்து 45 பேருக்கு நடத்தப்பட்ட கொரோனா பரிசோதனையில் புதிதாக 103 பேருக்கு பாதிப்பு உறுதியாகி உள்ளது. பெங்களூரு நகரில் 96 பேர், தட்சிண கன்னடாவில் 5 பேர், பெங்களூரு புறநகர், தார்வாரில் தலா ஒருவர் பாதிக்கப்பட்டு உள்ளனர். 26 மாவட்டங்களில் புதிதாக கொரோனா பாதிப்பு இல்லை. 

இதுவரை 6 கோடியே 60 லட்சத்து 63 ஆயிரத்து 515 பேருக்கு நடத்தப்பட்ட கொரோனா பரிசோதனையில் 39 லட்சத்து 49 ஆயிரத்து 549 பேருக்கு பாதிப்பு உறுதியாகி உள்ளது. இன்றும் உயிரிழப்பு இல்லை. இதுவரை 40 ஆயிரத்து 63 பேர் இறந்து உள்ளனர். 

வைரசால் பாதிக்கப்பட்ட 96 பேர்  குணம் அடைந்து வீடு திரும்பினர். இதுவரை 39 லட்சத்து 7 ஆயிரத்து 576 பேர் குணம் அடைந்து உள்ளனர். 1,868 பேர் மருத்துவ சிகிச்சையில் உள்ளனர். பாதிப்பு 0.54 சதவீதமாக உள்ளது.இவ்வாறு சுகாதாரத்துறை தெரிவித்து உள்ளது.

Next Story