ஒரு நபருக்கு ஒரு பதவி; காங்கிரஸ் கட்சி மாநாட்டில் முடிவு!
உதய்ப்பூரில் காங்கிரஸ் கட்சியின் 3 நாள் சிந்தனை அமர்வு மாநாடு - ‘நவ் சங்கல்ப் சிந்தன் ஷிவிர்’ என்ற பெயரில் நடைபெற்று வருகிறது.
உதய்ப்பூர்,
ராஜஸ்தான் மாநிலம், உதய்ப்பூரில் காங்கிரஸ் கட்சியின் 3 நாள் சிந்தனை அமர்வு மாநாடு - ‘நவ் சங்கல்ப் சிந்தன் ஷிவிர்’ என்ற பெயரில் நடைபெற்று வருகிறது. அடுத்த நாடாளுமன்ற தேர்தலை எதிர்கொள்வதற்கும், தொடர் தோல்விகளால் துவண்டு போய் உள்ள கட்சிக்கு புத்துயிரூட்டவும் மாநாடு நடைபெறுகிறது.
இந்த மாநாட்டின் 3-வது நாளான இன்று, ‘ஒரு நபருக்கு ஒரு பதவி' மற்றும்‘ஒரு குடும்பம், ஒரே சீட்டு’ என்ற விதியை அக்கட்சி ஏற்றுக்கொண்டது. ‘ஒரு நபருக்கு ஒரு பதவி' மற்றும்‘ஒரு குடும்பம், ஒரே சீட்டு’ என்ற விதியை அக்கட்சி திட்டமிட்டது.
அதன்படி, கட்சியில் ஒரே குடும்பத்தின் இரண்டாவது உறுப்பினர் அல்லது மூன்றாவது நபர் தேர்தலில் போட்டியிட விரும்பினால், அவர்கள் ஐந்து ஆண்டுகள் தீவிர அரசியலில் இருந்திருக்க வேண்டும். இந்த விதியின் படி, காந்தி குடும்பத்தினரை (சோனியா காந்தி, ராகுல் காந்தி மற்றும் பிரியங்கா காந்தி வத்ரா) ஆகிய மூன்று பேரையும் போட்டியிட தகுதியுடையதாக்குகிறது. இந்த நிலையில், அந்த விதியை காங்கிரஸ் ஏற்றுக்கொண்டது.
தற்போது லோக்சபா மற்றும் சட்டசபை தேர்தலுக்கான வேட்பாளர்களை காங்கிரஸ் தேர்தல் கமிட்டியே முடிவு செய்கிறது.இந்த காங்கிரஸ் தேர்தல் கமிட்டிக்கு பதிலாக, நாடாளுமன்ற வாரியம் அமைக்கும் விதி கொண்டுவரப்பட வேண்டும் என்ற கோரிக்கை வலுவாக இருந்து வந்தது. ஆனால், இந்த முன்மொழிவு செயற்குழுவால் கைவிடப்பட்டது. காங்கிரஸ் செயற்குழுவே, அக்கட்சியின் மிக உயர்ந்த முடிவெடுக்கும் அமைப்பாகும்.
Related Tags :
Next Story