கோதுமை கொள்முதல் மே 31 வரை நீட்டிப்பு - மத்திய மந்திரி பியூஷ் கோயல் அறிவிப்பு


கோதுமை கொள்முதல் மே 31 வரை நீட்டிப்பு - மத்திய மந்திரி பியூஷ் கோயல் அறிவிப்பு
x
தினத்தந்தி 15 May 2022 7:26 PM IST (Updated: 15 May 2022 7:26 PM IST)
t-max-icont-min-icon

விவசாயிகளிடம் இருந்து கோதுமை கொள்முதல் செய்வது மே 31 வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக மத்திய மந்திரி பியூஷ் கோயல் அறிவித்துள்ளார்.

புதுடெல்லி,

உலக அளவில் கோதுமையின் தேவை அதிகரித்ததாலும், உள்நாட்டில் பற்றாக்குறை ஏற்படுவதைத் தவிர்க்கும் வகையிலும் கோதுமை ஏற்றுமதிக்கு மத்திய அரசு தடை விதிப்பதாக அறிவித்தது. இதனால் விவசாயிகள் பாதிக்கப்படுவார்கள் என்று மாநில அரசுகள் மற்றும் எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டின. 

போதிய அளவு கோதுமையை மத்திய அரசு கொள்முதல் செய்யத் தவறியதே இதற்குக் காரணம். கொள்முதல் நடந்திருந்தால், கோதுமை ஏற்றுமதியை தடை செய்ய வேண்டிய அவசியம் ஏற்பட்டிருக்காது என்று விமர்சனங்கள் எழுந்தன.

இந்த நிலையில், விவசாயிகளிடம் இருந்து கோதுமை கொள்முதல் செய்வது மே 31ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக உணவு மற்றும் பொதுவிநியோகத் துறை மந்திரி பியூஷ் கோயல் அறிவித்துள்ளார். மாநில அரசுகளின் கோரிக்கையை ஏற்று கோதுமை கொள்முதல் மே 31ஆம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாக மந்திரி பியூஸ் கோயல் தெரிவித்துள்ளார்.

Next Story