பெண் வழக்கறிஞருக்கு பட்டப்பகலில் நடுரோட்டில் அடி, உதை; வைரலான வீடியோ


பெண் வழக்கறிஞருக்கு பட்டப்பகலில் நடுரோட்டில் அடி, உதை; வைரலான வீடியோ
x
தினத்தந்தி 16 May 2022 1:28 PM IST (Updated: 16 May 2022 1:28 PM IST)
t-max-icont-min-icon

கர்நாடகாவில் பெண் வழக்கறிஞரை பட்டப்பகலில் நடுரோட்டில் நபர் ஒருவர் அடித்து, மிதிக்கும் வீடியோ காட்சிகள் வைரலாகி வருகின்றன.





பெங்களூரு,



கர்நாடகாவின் பாகல்கோட் மாவட்டத்தில் வசித்து வரும் நபர் மஹந்தேஷ்.  இவரது அண்டை வீட்டுக்காரரான பெண் வழக்கறிஞருக்கும், இவருக்கும் இடையே நிலத்தகராறு இருந்து வந்துள்ளது.

இந்த நிலையில், விநாயக் நகர் பகுதியில் வைத்து அந்த பெண் வழக்கறிஞரையும், அவரது கணவரையும் மஹந்தேஷ் கடுமையாக தாக்கி உள்ளார்.

இதில், பெண் என்றும் பாராமல் வழக்கறிஞரை அவர் தாக்கும் காட்சிகள் படம் பிடிக்கப்பட்டு உள்ளன.  8 வினாடிகளே ஓட கூடிய அந்த வீடியோவில், மிக கொடூர தாக்குதல் காட்சிகள் காணப்படுகின்றன.

அதில், ஆவேசத்தில் அந்த பெண்ணின் வயிற்றிலேயே மஹந்தேஷ் மிதிக்கிறார்.  வலியால் ஒரு சில அடிகள் பின்னோக்கி சென்ற அந்த வழக்கறிஞர் கையில் இருந்த சில காகிதங்களை கீழே விடுகிறார்.  தொடர்ந்து, அவரை அடித்தும், அறைந்தும் மஹந்தேஷ் தாக்குகிறார்.  பல முறை அவரை மிதித்து தள்ளுகிறார்.

இந்த வீடியோ வைரலான நிலையில், சம்பவம் பற்றி போலீசார் வழக்கு பதிவு செய்து மஹந்தேஷை கைது செய்துள்ளனர்.  தனிப்பட்ட பகையால் இந்த தாக்குதல் நடந்துள்ளது என போலீசார் கூறுகின்றனர்.  தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.


Next Story