மாநில கட்சிகள் குறித்த ராகுல் காந்தியின் கருத்துக்கு ராஷ்டிரீய ஜனதாதளம் எதிர்ப்பு


மாநில கட்சிகள் குறித்த ராகுல் காந்தியின் கருத்துக்கு ராஷ்டிரீய ஜனதாதளம் எதிர்ப்பு
x
தினத்தந்தி 17 May 2022 1:50 AM IST (Updated: 17 May 2022 1:50 AM IST)
t-max-icont-min-icon

மாநில கட்சிகள் குறித்த ராகுல் காந்தியின் கருத்துக்கு ராஷ்டிரீய ஜனதாதளம் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

புதுடெ ல்லி,

காங்கிரஸ் சிந்தனையாளர்அமர்வு மாநாட்டில் நேற்று முன்தினம் உரையாற்றிய ராகுல் காந்தி, மாநில கட்சிகளுக்கு சித்தாந்தம் இல்லை எனவும், அவற்றால் பா.ஜனதா-ஆர்.எஸ்.எஸ்.யை எதிர்த்து போரிட முடியாது எனவும்கூறினார்.

இதற்கு ராஷ்டிரீய ஜனதாதளம் கட்சி எதிர்ப்பு தெரிவித்து உள்ளது. இது தொடர்பாக கட்சியின் செய்தி தொடர்பாளரும், எம்.பி.யுமான மனோஜ் ஜா கூறுகையில், 

‘பா.ஜனதாவுக்கு எதிரான போராட்டத்தில் பெ ரும்பான்மையான மக்களவைத் தொகுதிகளில் பிராந்தியக் கட்சிகள்தான் வலுவாக உள்ளன. மேலும் 320-க்கும் மேற்பட்ட நாடாளுமன்ற தொகுதிகளில், அவர்களை ஓட்டுனர் இருக்கையில் அமரவைத்துவிட்டு, காங்கிரஸ் இணைப்பயணிகளாக இருக்கவேண்டும். இதுவே ராஷ்டிரீய ஜனதாதள தலைவர் தேஜஸ்வி யாதவின் கருத்தும் கூட’என்று தெரிவித்தார்.

ராகுல் காந்தியின் கருத்து சற்று வினோதமாக இருப்பதாக கூறிய மனோஜ் ஜா, அவரது கருத்து கட்சியின் கருத்தில் இருந்து மாறுபட்டு இருப்பதாகவும் கூறினார்.

Next Story