உணவு விடுதியில் ரோபோக்கள்!! வாடிக்கையாளர்களை கவர புது டெக்னிக்
டெல்லியில் உணவு விடுதி ஒன்றில் இரண்டு ரோபோக்கள் உணவு பரிமாறும் பணியில் வாடிக்கையாளர்களை கவர்ந்து உள்ளது.
புதுடெல்லி,
நாடு முழுவதும் கொரோனா பெருந்தொற்றால் சமூக இடைவெளியை கடைப்பிடிக்க அரசு வலியுறுத்தி வருகிறது. இந்த சூழலில், சமூக தொடர்பில் இருந்து விலகி இருக்கும் வகையில் டெல்லியில் உள்ள உணவு விடுதி ஒன்று உணவு பரிமாறும் பணியில் இரண்டு ரோபோக்களை ஈடுபடுத்தி உள்ளது வரவேற்பு பெற்றுள்ளது.
டெல்லி-என்.சி.ஆர். பகுதியில் நொய்டா நகரில் தி எல்லோ ஹவுஸ் என்ற பெயரிலான ரோபோ ரெஸ்டாரண்ட் செயல்பட்டு வருகிறது. ராஜஸ்தானின் ஜெய்ப்பூர் நகரில் இதற்கு முன்பு இந்த உணவு விடுதியின் 3 கிளைகளில் இதுபோன்ற ரோபோக்கள் உணவு பரிமாறி வருகின்றன.
இதன் தொடர்ச்சியாக நொய்டாவில் உள்ள உணவு விடுதியிலும் 2 ரோபோக்கள் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளன. அந்த உணவு விடுதியின் உரிமையாளரான ஜிஷு ஆனந்த் கூறும்போது, செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தில் இந்த ரோபோக்கள் செயலாற்றுகின்றன.
ஒவ்வொரு மேஜையில் இருந்து பெறப்படும் உணவு ஆர்டர் உள்ளிட்ட தகவல்கள் ரோபோக்களுக்கு அனுப்பப்படும். ஒரு செல்போன் அல்லது டேப்லட் (கணினி வகை) வழியே மேஜையின் எண்ணை பதிவு செய்து விட்டால், இந்த ரோபோக்கள் அந்த மேஜைக்கு சென்று உணவுகளை பரிமாறி விடும் என கூறியுள்ளார்.
இந்த ரோபோக்களுக்கு 2 முதல் 3 மணிநேரம் சார்ஜ் செய்து விட்டால் போதும். நாள் முழுவதும் அது செயலாற்றும். இந்த புதிய ரோபோக்களின் வரவை வாடிக்கையாளர்கள் வரவேற்று உள்ளனர்.
Related Tags :
Next Story