இந்தியாவில் தயாரிக்கப்பட்ட 2 போர்க்கப்பல்கள் நாட்டுக்கு அர்ப்பணிப்பு


இந்தியாவில் தயாரிக்கப்பட்ட 2 போர்க்கப்பல்கள் நாட்டுக்கு அர்ப்பணிப்பு
x
தினத்தந்தி 17 May 2022 6:28 PM GMT (Updated: 2022-05-17T23:58:12+05:30)

இந்தியாவில் தயாரிக்கப்பட்ட 2 போர்க்கப்பல்கள் சேவையை பாதுகாப்புத் துறை மந்திரி ராஜ்நாத் சிங் தொடங்கி வைத்தார்.

மும்பை,

உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட சூரத், உதய்கிரி போர்கப்பல்கள் கடற்படைக்கு அர்ப்பணிக்கும் விழா மும்பை மஜ்காவ் டாக்கில் நடந்தது.

இந்த விழாவில் மத்திய பாதுகாப்புத் துறை மந்திரி ராஜ்நாத் சிங் கலந்து கொண்டு 2 போர்க்கப்பல்களையும் நாட்டுக்கு அர்ப்பணித்தார். இந்த போர்க்கப்பல்கள் மஜ்காவ் டாக் கப்பல் கட்டும் நிறுவனத்தில் தயாரிக்கப்பட்டதாகும். 

சூரத் 15-பி டெஸ்டிராயர் திட்டத்தின் கீழ் தயாரிக்கப்பட்ட 4-வது போர்க்கப்பல் ஆகும். இதற்கு மேற்கு இந்தியாவில் மும்பைக்கு பிறகு பெரிய வணிக மையமாக உள்ள குஜராத் மாநிலத்தின் தலைநகரான சூரத்தின் பெயர் சூட்டப்பட்டுள்ளது.

உதய்கிரி 17-ஏ பிரிகேட்ஸ் திட்டத்தின் கீழ் தயாரான 3-வது போர்க்கப்பல் ஆகும். இதற்கு ஆந்திராவின் மலைச்சிகரமான உதய்கிரியின் பெயர் சூட்டப்பட்டுள்ளது. இந்த கப்பலில் நவீன ஆயுதங்கள், சென்சார்கள், பிளாட்பாரம் நிர்வாக திட்டம் உள்ளிட்ட பல அம்சங்கள் உள்ளதாக கடற்படை தெரிவித்துள்ளது.

Next Story