22 வயது ஆசிரியைக்கு மயக்க மருந்து கலந்த குளிர்பானத்தைக் கொடுத்து பாலியல் வன்கொடுமை செய்த தனியார் பள்ளியின் இயக்குநர் கைது!


22 வயது ஆசிரியைக்கு மயக்க மருந்து கலந்த குளிர்பானத்தைக் கொடுத்து பாலியல் வன்கொடுமை செய்த தனியார் பள்ளியின் இயக்குநர் கைது!
x

மயக்க மருந்து கலந்த குளிர்பானத்தைக் கொடுத்து ஆசிரியையை பாலியல் வன்கொடுமை செய்திருக்கிறார்.

லக்னோ,

உத்தரப்பிரதேச மாநிலம், ஷாஜஹான்பூர் மாவட்டத்தில் தனியார் பள்ளி ஒன்றில் 22 வயது பெண், ஆசிரியையாகப் பணியாற்றி வந்தார்.

இந்த நிலையில், இரண்டு மாதங்களுக்கு முன்பு அப்பள்ளி இயக்குநர், பள்ளி தொடர்பான வேலைகள் இருப்பதாகக் கூறி அந்த ஆசிரியையை அழைத்துச் சென்றிருக்கிறார். அங்கு மயக்க மருந்து கலந்த குளிர்பானத்தைக் கொடுத்து அவரை பாலியல் வன்கொடுமை செய்திருக்கிறார்.

அதை வீடியோவாகவும் பதிவுசெய்து அவ்வப்போது மிரட்டி மீண்டும் பாலியல் வன்கொடுமை செய்ய வற்புறுத்தியிருக்கிறார். இதனால் பாதிக்கப்பட்ட அந்த ஆசிரியை, யாருடனும் பேசாமல் மவுனமாக இருந்திருக்கிறார்.

அதைத் தொடர்ந்து, அந்த ஆசிரியையின் பெற்றோர் விசாரித்ததில், நடந்த சம்பவத்தைக் கூறியிருக்கிறார்.

இதனிடையே, பாதிக்கப்பட்ட அந்த ஆசிரியை திடீரென மாயமானார்.இந்த நிலையில், பாதிக்கப்பட்ட ஆசிரியையைக் குற்றம்சாட்டப்பட்டவர்கள்தான் கடத்திச் சென்றிருக்க வேண்டும் எனப் பெண்ணின் பெற்றோர் புகார் அளித்துள்ளனர்.

அந்த ஆசிரியையின் பெற்றோர் ஷாஜஹான்பூர் போலீசிடம் அளித்த புகாரின் பேரில், குற்றம்சாட்டப்பட்டவர் கைது செய்யப்பட்டிருக்கிறார்.மேலும், பாலியல் வன்கொடுமை செய்து பதிவாக்கிய வீடியோவையும் கைப்பற்றினர்.

அவரிடம் தீவிர விசாரணை நடைபெறுகிறது.காணாமல் போன ஆசிரியையை உ.பி போலீசார் தனிப்படை அமைத்துத் தேடி வருகின்றனர் எனவும் தகவல் தெரிவிக்கப்பட்டது.

நாட்டில் பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகள் நாளுக்கு நாள் அதிகரிப்பது மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.


Next Story