கர்நாடகத்தில் புதிதாக 249 பேருக்கு கொரோனா


கர்நாடகத்தில் புதிதாக 249 பேருக்கு கொரோனா
x

கர்நாடகத்தில் புதிதாக 249 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

பெங்களூரு: கர்நாடகத்தில் நேற்று 15 ஆயிரத்து 197 பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. இதில் 249 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது. பெங்களூரு நகரில் 186 பேருக்கும், மைசூருவில் 13 பேருக்கும், குடகில் 12 பேருக்கும் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. ஒரே நாளில் 501 பேர் குணம் அடைந்தனர்.

2 ஆயிரத்து 565 பேர் மருத்துவ சிகிச்சையில் உள்ளனர். கொரோனா பாதிப்பு விகிதம் 1.63 சதவீதமாக உள்ளது. மேற்கண்ட தகவலை சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.


Related Tags :
Next Story