காரில் கடத்திய ரூ.27 லட்சம் கஞ்சா பறிமுதல்


காரில் கடத்திய ரூ.27 லட்சம் கஞ்சா பறிமுதல்
x

ஆந்திராவில் இருந்து கேரளாவுக்கு காரில் கடத்திய ரூ.27 லட்சம் மதிப்பிலான கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

மங்களூரு:-

இது தொடர்பாக 3 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

போலீசார் வாகன சோதனை

தட்சிண கன்னடா மாவட்டம் மங்களூரு நகர் கோனஜே போலீசார் நேற்று முன்தினம் நெக்கிலபதவு பகுதியில் வாகன சோதனை நடத்தினர். அப்போது அந்த வழியாக வந்த காரை தடுத்து நிறுத்தி விசாரித்தனர். அப்போது காரில் இருந்தவர்கள் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்ததால் சந்தேகமடைந்த போலீசார், காருக்குள் சோதனை நடத்தினர்.

அப்போது காருக்குள் மூட்டை, மூட்டையாக கஞ்சா இருந்தது. இதையடுத்து போலீசார் அவர்கள் 3 பேரையும் காருடன் போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்று கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தினர்.

ரூ.27 லட்சம் கஞ்சா பறிமுதல்

விசாரணையில் அவர்கள், கேரள மாநிலம் காசர்கோடு மாவட்டம் மஞ்சேஸ்வரை சேர்ந்த அபுபக்கர் சித்திக் (வயது 35), ஹைதர் அலி (30), அகில் (30) என்பது தெரியவந்தது. மேலும் அவர்கள் ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் இருந்து மங்களூரு வழியாக கேரளாவுக்கு கஞ்சாவை கடத்தி சென்றதும் தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் 3 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

அவர்களிடம் இருந்து ரூ.27 லட்சம் மதிப்பிலான கஞ்சா மற்றும் காரை போலீசார் பறிமுதல் செய்தனர். கைதான 3 பேரிடமும் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story