உ.பி.யில் 3 பேர் பயணிக்க வேண்டிய ஆட்டோவில் பயணித்த 27 பேர்...!


உ.பி.யில் 3 பேர் பயணிக்க வேண்டிய ஆட்டோவில் பயணித்த 27 பேர்...!
x

உ.பி.யில் ஒரே ஆட்டோவில் குழந்தைகள், பெரியவர்கள் உட்பட 27 பேர் பயணம் செய்தனர்.

லக்னோ,

உத்தரப் பிரதேச மாநிலம் பிந்தி கோட்வாலி மற்றும் ஃபதேபூரில் ஆட்டோ ஒன்று அதிக வேகத்தில் சென்றது. வேகமாக சென்ற ஆட்டோவை கண்ட போக்குவரத்து போலீசார் துரத்திப் பிடித்தனர். அப்போது ஆட்டோ உள்ளே இருப்பவர்களை இறங்கச் சொல்லி போலீசார் கூறினார்.

4 பேர் அமந்து செல்லக்கூடிய ஆட்டோவில் உள்ளே இருந்து மளமளவென ஆட்கள் இறங்கினர். மொத்தமாக அந்த ஆட்டோவுக்குள் ஓட்டுநர் உள்பட 27 பேர் இருந்தனர். இதனை கண்ட போக்குவரத்து போலீசார் அதிர்ச்சியில் உறைந்தனர். இந்த சம்பவம் குறித்து ஆட்டோ ஓட்டுநரை போலீசார் எச்சரித்து 11,500 ரூபாய் அபராதம் விதித்தனர். இதுபற்றிய வீடியோ இணையதளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

உத்தரப் பிரதேசத்தில் ஒரே ஆட்டோவில் குழந்தைகள், பெரியவர்கள் உட்பட 27 பேர் பயணம் செய்தது அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


Next Story