ஐபோன் உள்பட விலை உயர்ந்த செல்போன்களை திருடிய 3 பேர் கைது


ஐபோன் உள்பட விலை உயர்ந்த செல்போன்களை திருடிய 3 பேர் கைது
x
தினத்தந்தி 22 March 2023 12:15 AM IST (Updated: 22 March 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

பெங்களூருவில் ஐபோன் உள்பட விலை உயர்ந்த செல்போன்களை குறிவைத்து திருடிய 3 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து ரூ.40 லட்சம் மதிப்பிலான 110 செல்போன்கள் மீட்கப்பட்டது.

பெங்களூரு:-

ஐபோன்

செல்போன்களில் விலை உயர்ந்தது ஐபோன் ஆகும். ஐபோனை வைத்திருப்பவர்கள் அதை ஒரு பெருமையாக கருதுகிறார்கள். இந்த நிலையில் பெங்களூருவில் ஐபோனை குறிவைத்து ஒரு கும்பல் கொள்ளையடித்து வந்தது. இதுபற்றி ஏராளமான புகார்கள் போலீஸ் நிலையங்களில் குவிந்து வந்தன. இதையடுத்து அந்த கும்பலை பிடிக்க விவேக்நகர் போலீசார் சார்பில் தனிப்படை அமைக்கப்பட்டது.

தனிப்படை போலீசார் இதுபற்றி தீவிர விசாரணை நடத்தி வந்தனர். மேலும் செல்போன் கொள்ளை கும்பலை பிடிக்க தீவிரம் காட்டி வந்தனர். இந்த நிலையில் தனிப்படை போலீசார் நடத்திய விசாரணையில் ஐபோன்களை குறிவைத்து கொள்ளையடித்து வந்த கும்பல் பற்றி துப்பு கிடைத்தது. மேலும் அந்த கொள்ளை கும்பல் முகமது சக்லைன், சுகேல், ஷாகீப் ஆகியோர் என்பதும், அவர்கள் பெங்களூரு கோரிப்பாளையா பகுதியைச் சேர்ந்தவர்கள் என்பதும் தெரியவந்தது.

110 செல்போன்கள் மீட்பு

மேலும் அவர்கள் நகரில் பல்வேறு இடங்களில் கைவரிசை காட்டி இருப்பதும் தெரியவந்தது. இதையடுத்து போலீசார் கோரிப்பாளையாவுக்கு சென்றனர். போலீசார் வருவது பற்றி அறிந்த முகமது சக்லைன், சுகேல், ஷாகீப் ஆகிய 3 பேரும் அதேப்பகுதியில் பதுங்கிக் கொண்டனர். இதையடுத்து போலீசார் துப்பு துலக்கி அவர்கள் 3 பேரையும் கைது செய்தனர். அவர்களிடமிருந்து 40 ஐபோன்கள் உள்பட விலை உயர்ந்த 110 செல்போன்களை போலீசார் மீட்டனர்.

மேலும் ஒரு மோட்டார் சைக்கிள், ஒரு ஸ்கூட்டர் ஆகியவற்றையும் பறிமுதல் செய்தனர். அவற்றின் மொத்த மதிப்பு ரூ.40 லட்சம் இருக்கும் என்று போலீசார் தெரிவித்தனர். தொடர்ந்து அவர்கள் மீது விவேக்நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து

விசாரித்து வருகிறார்கள்.


Next Story