கஞ்சா போதையில் சுற்றிய 3 பேர் கைது


கஞ்சா போதையில் சுற்றிய 3 பேர் கைது
x
தினத்தந்தி 10 May 2023 12:15 AM IST (Updated: 10 May 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

லக்குவள்ளி கிராமத்தில் கஞ்சா போதையில் சுற்றிய 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

சிக்கமகளூரு-

சிக்கமகளூரு மாவட்டம் தரிகெரே தாலுகா லக்குவள்ளி கிராமத்தில் கஞ்சா போதையில் சிலர் சுற்றித்திரிவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் லக்குவள்ளி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்றனர். அப்போது அங்கு 3 வாலிபர்கள் சுற்றித்திரிந்து கொண்டிருந்தனர். போலீசாரை கண்ட அவர்கள் ஓட்டம் பிடித்தனர். அதையடுத்து போலீசார் அவர்கள் 3 பேரையும் பிடித்து விசாரித்தனர்.

விசாரணையில் அவர்கள் அதே பகுதியைச் சேர்ந்த வினய், ராஜேஷ் மற்றும் தர்ஷன் ஆகியோர் என்பதும், 3 பேரும் கஞ்சா போதையில் சுற்றித்திரிந்ததும் தெரிந்தது. மேலும் அவர்களிடம் 100 கிராம் கஞ்சா பொட்டலங்களும் இருந்தது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் ராஜேஷ் உள்ளிட்ட 3 பேரையும் கைது செய்தனர். அவர்களிடமிருந்து 100 கிராம் கஞ்சா பொட்டலத்தையும் போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் இதுகுறித்து லக்குவள்ளி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.


Next Story