மடாதிபதி தற்கொலை வழக்கில் கைதான 3 பேர் ஜாமீன் கோரி மனு
மடாதிபதி தற்கொலை வழக்கில் கைதான 3 பேர் ஜாமீன் கோரி கோர்ட்டில் மனு தாக்கல் செய்தனர்.
பெங்களூரு-
ராமநகர் மாவட்டம் மாகடி தாலுகாவில் உள்ள பண்டே மடத்தின் மடாதிபதியாக இருந்து வந்தவர் பசவலிங்க சுவாமி. இவர், கல்லூரி மாணவியுடன் ஆபாசமாக இருக்கும் வீடியோ வெளியானதால் தற்கொலை செய்திருந்தார். ஹனிடிராப் முறையில் சிக்க வைத்ததும், ஆபாச வீடியோவை வெளியிடுவதாக மிரட்டியதால் அவர் தற்கொலை செய்திருந்தார். இதுதொடர்பாக கண்ணூரு மடத்தின் மடாதிபதி மிருதன்ஜெய சுவாமி, மாணவி நீலாம்பிகா, மகாதேவய்யா ஆகிய 3 பேரையும் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.
இந்த நிலையில், கைதான 3 பேரும் தங்களுக்கு ஜாமீன் வழங்க வேண்டும் என்று ராமநகர் மாவட்டம்ட 1-வது கூடுதல் செசன்சு கோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளனர். அந்த மனு மீதான விசாரணை விரைவில் நடைபெற உள்ளது.
Related Tags :
Next Story