நுபுர் சர்மா உருவப்பொம்மையை தூக்கில் தொங்க விட்ட வழக்கில் 3 வாலிபர்கள் கைது


நுபுர் சர்மா உருவப்பொம்மையை தூக்கில் தொங்க விட்ட வழக்கில் 3 வாலிபர்கள் கைது
x

நுபுர் சர்மா உருவப்பொம்மையை தூக்கில் தொங்க விட்ட வழக்கில் 3 வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர்.

பெங்களூரு: பா.ஜனதா கட்சியின் முன்னாள் செய்தி தொடர்பாளர் நுபுர் சர்மா. இவர், கடந்த சில நாட்களுக்கு முன்பு நபிகள் நாயகம் குறித்து சர்ச்சையை ஏற்படுத்தும் விதமாக பேசி இருந்தார். இதையடுத்து, நுபுர் சர்மாவுக்கு எதிராகநாடு முழுவதும் நடந்த போராட்டத்தில் உத்தரபிரதேசம், டெல்லி, மேற்கு வங்காளம், ஜார்கண்ட் மாநிலங்களில் வன்முறை வெடித்துள்ளது. கர்நாடகத்திலும் பல மாவட்டங்களில் நுபுர் சர்மாவுக்கு எதிராக போராட்டங்கள் நடைபெற்றிருந்தது. இந்த நிலையில், பெலகாவி மாவட்டம் மார்க்கெட் போலீஸ் எல்லைக்கு உட்பட்ட போர்ட் ரோட்டில் மின் கம்பத்தில் நுபுர் சர்மாவின் உருவ பொம்மையை மர்மநபர்கள் தூக்கில் தொங்க விட்டு இருந்தனர். இந்த சம்பவம் பெலகாவியில் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது.

இந்த சம்பவம் குறித்து யாரும் புகார் அளிக்கவில்லை. ஆனாலும் மார்க்கெட் போலீசார் தாமாக முன்வந்து நுபுர் சர்மா உருவ பொம்மையை தூக்கில் தொங்க விட்ட நபர்கள் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள். இந்த வழக்கு சம்பந்தமாக 3 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். விசாரணையில், அவர்கள் பெயர் முகமது சோயிப், அமன் மோகாதி, அர்பாஜ் மொகாசி என்று தெரிந்தது. அவர்கள் மீது மார்க்கெட் போலீசார் வழக்குப்பதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story